பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

158


மருத்துவப் பகுதி

16. பகலில் விண்மீன்

புதுச்சேரியில் எங்கள் வீட்டில் ஒருநாள் முற்பகல் பத்து மணியளவில், பொன்னாங் கண்ணிக் கீரை வாங்கி ஆய்ந்து கொண்டிருந்தோம். “அப்போது நான் (சு.ச.), பொன்னாங் கண்ணிக் கீரை கண்ணுக்கு மிகவும் நல்லது என்று சொன்னேன். அதைத் தொடர்ந்து என்மனைவி கூறிய ஒரு கதைவருமாறு:-

ஆண்டுக் கணக்கில் பொன்னாங்கண்ணிக் கீரை பறித்துக் கொண்டு வந்து தெருவிலே கூவி விற்கும் கிழவி யொருத்தி, ஒரு நாள் பகலில் திடீரென வானத்தை அண்ணாந்து நோக்கியபோது, அந்தப் பகல் நேரத்திலேயே வானில் உள்ள விண்மீன்கள் (நட்சத்திரங்கள்) தெரிந்தனவாம். இது என் மனைவி சொன்ன கதை.

சரி.கீரை ஆய்ந்து முடிந்ததும், யான். திறந்த நடு வாசலில் போய் நின்று கொண்டு, 'ஓடிவாருங்கள்-ஓடி வாருங்கள்’ என்று கூவினேன். உடனே என் மனைவி மக்கள், என்னவோ-ஏதோ என்று பதறிப் பதைத்துப் பரபரப்புடன் ஓடிவந்து என்ன-என்ன என்று வினவினர்.

நான் அப்போது வானத்தைச் சுட்டிக் காட்டி, “அதோ பாருங்கள்-ஆகாயத்தில் நட்சத்திரங்கள் நன்றாகத் தெரிகின்றன’ என்று கூறினேன். பொன்னாங்கண்ணிக் கீரை விற்ற கிழவிக்குப் பகலில் நட்சத்திரங்கள் தெரிந்தன என்று கூறிய கதைக்கு ஏட்டிக்குப் போட்டியாகப் பகலிலேயே உங்களுக்கு ஆகாயத்தில் நட்சத்திரங்கள் தெரிவதாகப் புளுகுகிறீர்கள் - கிண்டல் செய்கிறீர்கள்-என்று கூறிக்-