பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/162

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

160

தங்கள் போர் வானூர்தியில் இருந்தபடி இங்கிலாந்தைத் தாக்கத் தொடங்கினர், விழிப்படைந்த ஆங்கிலேய வானூர்திப் படையினர், செர்மானியரின் போர் வானூர்திகள் மிக்க தொலைவில் வரும்போதே கண்டு பிடித்துச் சுட்டுத் தாக்கிச் செர்மானியரைச் செயலறச் செய்தனர்.

இந்நிலையில், ஆங்கில வானூர்திப் படையினர் மிக்க தொலைவில் வரும் வானூர்திகளை எவ்வாறு காண முடிகிறது என்பது கேள்விக் குறியாயிற்று. ஆங்கில வானூர்திப் படையினர்க்கு 'கேரட்' (carrot ) நிரம்ப உண்ணத் தருவதால், அவர்கட்குக் கண்பார்வை கூர்மை பெற்று மிக்க தொலைவில் உள்ள பொருள்களையும் கண்டுபிடிக்க முடிகிறது-என்ற செய்தி பரப்பப்பட்டது. இதை அறிந்ததும், இங்கிலாந்தில் கேரட் கிழங்கின் விலை உயர்ந்து விட்டதாம். பலரும் மிகுதியாக வாங்கி உண்ணத் தொடங்கியதே இதற்குக் காரணமாம்.

உண்மை பிறகு தெரிய வந்தது. 'ராடார்' (Rader) என்னும் ‘தொலை இயக்கமானி ' கண்டு பிடிக்கப்பட்டு அமைக்கப்பெற அதன் உதவியால் தொலைவிலுள்ள பொருள்களையும் காண முடிந்தது; அதனால் செர்மானியரின் வான ஊர்திகளை எளிதில் தகர்க்க முடிந்ததுஎன்பதே பிறகு அறியப்பட்ட உண்மை. இந்த 'ராடார் கருவி செய்யும் வேலையைப் பொன்னாங் கண்ணிக் கீரை செய்யும் போலும்!

பொன்னாங் கண்ணிக்கீரைக்கு, ‘கண்ணுக்கு அணி' கண்ணுக்கு இனியான்' என்ற பெயர்கள் உண்மையும் ஈண்டு ஒப்பு நோக்கத்தக்கது.