பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

165

காந்தி சங்க நூல்களில் இடம் பெறவில்லை; ஆனால் நெருஞ்சி சங்க நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னைப் பல்கலைக் கழக ஆங்கிலம்-தமிழ்ச் சொற் களஞ்சிய அகர முதலியில், Helianthus-என்னும் சொல் லுக்கு, சூரிய காந்தியை உட்படுத்திய நெருஞ்சிப் பேரினம்’ எனப் பொருள் கூறப்பட்டுள்ளது. எனவே, இவை சூரியனை நோக்கித் திரும்புவதினால் ஓரினம் எனப்படுகிறது.

நெருஞ்சி ஞாயிறை நோக்கித் திரும்பும் செய்தி முற்கால இலக்கியங்களாகிய சங்க நூல்களிலும் இடைக்கால இலக்கியங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும் குறிப் பிடப்பட்டுள்ளது. அவற்றுள் ஒருசில காண்பாம்:

“ஓங்கு மலைநாடன் ஞாயிறு அனையன், தோழி!
நெருஞ்சி அனைய என்பெரும் பணைத் தோளே”.
(குறுந் தெகை-315)

‘வானிடைச் சுடரொடு திரிதரு நெருஞ்சி போல
என்னொடு திரியேன் ஆயின்’’.
(அகநானூறு: 336-18,19)

“பாழுர் நெருஞ்சிப் பசலை வான்பூ
ஏர்தரு சுடரின் எதிர்கொண் டாஅங்கு’
(புறநானூறு: 155-4,5)

‘நீள் சுடர் நெறியை நோக்கு
நிரையிதழ் நெருஞ்சிப் பூப்போல்’
(சீவக சிந்தாமணி -461),

“வெஞ்சுடர் நோக்கும் நெருஞ்சியில்’
(இறையனார் அகப் பொருள்-47-உரைப்பாட்டு)