பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

174

செலவிட்டிருக்கிறார். மற்றும், அகத்திணையியல், பொருளியல் ஆகியவற்றிலும் உவமத்தைப் பற்றி ஒரளவு கூறியுள்ளார்.

ஒப்புமைக் கலை நூல்கள்:

(16) தொல்காப்பியத்திற்குப் பல நூற்றாண்டு கட்குப் பின் எழுந்த இலக்கண நூல்களுள் அணியிலக்கணமும் தனிப் பிரிவாக இடம் பெற்றுள்ளது. அணியிலக்கணத்தைப் பற்றிமட்டும் கூறும் நூல்களும் சில உள. சில நூல்கள் வடமொழி நூல்களைத் தழுவியுள்ளன. அணியிலக்கணம் கூறும் அனைத்து நூல்களும் உவமையைப் பற்றி விரிவாகக் கூறியுள்ளன. அந்நூல்களைப் பற்றிய விவரங்களைக் கால வாரியாகக் காண்பாம்:

(அ)அணியியல்-இஃது அணியிலக்கணம் மட்டும் கூறுவது; பிற்கால நூல்களுள் முந்தியது. ஆசிரியர் பெயரும் காலமும் தெரியவில்லை. நூலும் முழுதும் கிடைக்கவில்லை.

(ஆ) வீரசோழியம்-இஃது ஐந்து பிரிவுகளில் ஐந்திலக் கணமும் கூறுவது. ஆசிரியர் புத்தமித்திரனார். காலம் கி.பி. பதினோராம் நூற்றாண்டு. -

(இ) தண்டியலங்காரம்-இஃது அணியிலக்கணம் மட்டும்கூறுவது; வடமொழியிலுள்ள காவிய தரிசனம்’ என்னும்நூலைத் தழுவியது. ஆசிரியர் தண்டியாசிரியர். காலம் கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டு.

(ஈ) நன்னூல்-இஃது ஐந்திலக்கணமும் கூறுவது என்று சிலரும், எழுத்து, சொல், பொருள் என்னும் மூன்றிலக் கணமே கூறுவது என்று சிலரும் மொழிகின்றனர். இப் போது நன்னூலின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரம்