பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

175

என்னும் இரு பிரிவுகள் மட்டுமே கிடைத்துள்ளன. இதன் ஆசிரியர் பவணந்தி முனிவர். காலம் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு.

(உ) மாறனலங்காரம். இஃது அணியிலக்கணம் மட்டும் கூறுவது. ஆசிரியர் திருக்குருகைப் பெருமாள் கவிராயர். காலம் கி.பி. பதினாறாம் நூற்றாண்டு.

(ஊ) இலக்கண விளக்கம்-இது தொல்காப்பியம் போல் பொருளதிகாரத்தில் அணியிலக்கணம் கூறுவது. ஆசிரியர் வைத்திய நாததேசிகர்-17 ஆம் நூற்றாண்டு.

(எ) தொன்னூல் விளக்கம்-ஐந்து பிரிவுகளில் ஐந்திலக் கணமும் கூறுவது. ஆசிரியர் பெஸ்கி (Beschi) என்னும் வீரமா முனிவர்-18 ஆம் நூற்றாண்டு.

(ஏ) முத்து வீரியம்-ஐந்து பிரிவுகளில் ஐந்திலக்கணமும் கூறுவது. ஆசிரியர் முத்து வீரநாவலர்-19 ஆம் நூற்றாண்டு

(ஐ) சந்திரா லோகம்-அணியிலக்கணம் மட்டும் கூறுவது. வடமொழி பெயர்ப்பு. ஆசிரியர் விசாகப் பெருமாள் ஐயர் -19 ஆம் நூற்றாண்டு. இவரே ஐந்திலக்கண வினாவிடை’ என்னும் ஐந்திலக்கண நூலும் எழுதியுள்ளார்.

- (ஒ) தண்டியலங்காரசாரம்- அணியிலக்கணம் மட்டும் கூறுவது. ஆசிரியர் தி.ஈ. சீநிவாசராகவாசாரியார்-19-29 -ஆம் நூற்றாண்டு.

அணிகளின் எண்ணிக்கை:

(17) பொருள் அணிகள் என்னும் பெயரில் தண்டியலங் காரத்தில் முப்பத்தைந்து அணிகளும், மாறனலங்காரத்தில் அறுபத்து நான்கு அணிகளும், சந்திரா லோகத்தில் நூறு அணிகளும் பேசப்பட்டுள்ளன. ஆசிரியர் ஒவ்வொருவரும்