179
உள்ளுறை உவமம்: (23)
தமிழ் ஒப்புமைக் கலையின் உயர் எல்லையை உலகிற்குப் பறைசாற்ற இன்னொரு சுவையானசெய்தி காத்துக் கிடக்கிறது. தொல்காப்பியர் அகத்திணையியலில் உவமத்தைப் பொதுவாக உள்ளுறை உவமம், ஏனை உவமம் என இரண்டு வகைப்படுத்தி அவற்றிற்கு இலக்கணமும் வகுத் துள்ளார். ஏனை உவமம் என்பது, உவமையையும் பொருளையும் வெளிப்படையாகச் சொல்லும் வெளிப்படை உவமமாகும். 'ஒருவர் மாடு இன்னொருவர் வைக்கோலை மேயும் ஊரினன் இவன்’ என உவமையை மட்டும் கூறி, அதன் வாயிலாக"இவன் மாற்றார் உடைமையைக் களவாடுபவன்’, என்னும் கருத்தைக் குறிப்பால் உணரவைப்பது உள்ளுறை உவமம். அதாவது, சொல்ல வந்த கருத்து உள்ளே உறையும் உவமம் உள்ளுறை உவமமாகும். இஃதல்லாத ஏனைய (மற்றைய) உவமம் ஏனை உவமமாகும்.
(24)"உள்ளுறை உவமம் அமைத்துப் பேசுவதும் எழுதுவதும் இக்காலத்திலும் சுவைத்துப் பாராட்டப்படுகின்றன. காதலன், காதலி, தோழி, செவிலி ஆகியோருள் இன்னின்னார் இப்ப்டியிப்படித்தான் உள்ளுறையுவமம் கூறவேண்டும் எனவும் தொல்காப்பியம் கூறுவதை நோக்குங்கால், ஒப்புமைக் கலையின் சல்லிவேறாம் புலப்படுகிறது.உள்ளுறை யுவமத்தின் அழகினைச் சங்ககால அகப்பொருள் நூல்களில் சுவைக்க வேண்டுமே!
(25) வீரசோழியம், தண்டியலங்காரம், மாறனலங் காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் முதலிய பிற்கால நூல்களுள் பெரும்பாலானவை தொல்