பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

180

காப்பியத்தை ஒட்டியே உவம இலக்கணம் கூறியுள்ளன. சிறுபான்மை வேற்றுமையும் இருக்கலாம். தொல்காப்பியர் கூறியுள்ள வினை, பயன் என்னும் இரு பொதுத் தன்மை களையும் எல்லா நூல்களும் ஏற்றுக்கொண்டுள்ளன. அவர் கூறும் மெய், உரு என்னும் இரண்டையும், தண்டியலங் காரம், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம் ஆகிய நூல்கள், பண்பு’ என்னும் ஒன்றில் அடக்கியுள்ளன. வடிவும் நிறமும் பண்புகளே. இஃது ஒரு பெரிய வேற்றுமை யாகாது. பிற்கால நூல்களில் உவமையின் வகைகள் சிறிது விரிவாகக் கூறப்பட்டுள்ளன; ஈண்டு விரிப்பிற் பெருகும்.

5. ஒப்புமைக் கலையின் எதிர்காலம்

(26) அனைத்தும் தானாக உள்ள ஒப்புமைக் கலைக்கு நல்ல எதிர்காலம் காத்துக்கிடக்கிறது. அதன் வளர்ச்சியில் நாட்டம் செலுத்தவேண்டும். ஒப்புமைக் கலை குறித்துப் புதிய முறையில் தனி நூல்கள் எழவேண்டும். பழந்தமிழ் நூல்களிலுள்ள உவமைகளையும், சிறந்த பேச்சாளர்களின்-எழுத்தாளர்களின் உவமைகளையும் ஒன்றுதிரட்ட வேண்டும். தமிழ்ப் பழமொழிகளில் உள்ளுறை உவமம் அடங்கியிருப்பதை ஆராய்ந்து விளக்க வேண்டும். தமிழ் உவமைகளைப் பிற மொழிகளிலும், பிற மொழி உவமை களைத் தமிழிலும் பெயர்த்தல் வேண்டும். பாடத்திட்டத் தில் ஒப்புமைக்கலை உரிய இடம் பெறவேண்டும். ஒப்புமைக் கலைச் சுவை அமையப் பேசவும் எழுதவும் கற்பிக்கவும் பயிற்சியளிக்க வேண்டும். இலக்கியங்களிலுள்ள உவமை களைப் பற்றித் திறனாய்வு செய்யும் திறமையை வளர்க்க வேண்டும். பிற கலைகளில் ஒப்புமைக்கலை ஊடுருவி நிற்பதை ஆராய்ந்து உணரச் செய்யவேண்டும். பிற கலைகளின் வளர்ச்சிக்கு ஒப்புமைக் கலையைப் பயன்படுத்தும்