பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

182

இஃதிருக்க, முதலில் தோன்றியது நாட்டியமா? நாடகமா? - என்பதைத் தெளிவு செய்ய வேண்டும். சிலரை வைத்துச் சிறிய நாடகம் பழக்குவதே முதலில் இயல்பாயுள்ளது. பின்னரே, பலரை வைத்துப் பெரிய நாடகம் பயிற்றப்படுகிறது. இதிலிருந்து, முதலில் ஆள் குறைவாயிருப்பதே எளிது என்பது தெளிவாகிறது. இந்த அடிப்படை விதியுடன் பொருத்திப் பார்க்குங்கால், நாடகத் தினும் நாட்டியமே முற்பட்டது என்பது தெளிவாகும். மகிழ்ச்சியால் பலர் குதிக்கும் இடங்களிலும், முதலில் ஒரு வரே குதிக்கத் தொடங்கி யிருப்பார்.-பின்னரே அவரைத் தொடர்ந்து பலரும் குதித்திருப்பர்.

கூத்துத் தமிழ் நூல்கள்:

நாட்டியத்தையும் நாடகத்தையும் தன்னுட்கொண்ட கூத்தத் தமிழ் தொடர்பான நூல்கள் பல தமிழில் இருந்தன. இதன் சான்றுக்கு, தமிழ் முத்தமிழ் என வழங்கப்படுகின்ற ஒன்றே போதும். ஆனால் கூத்துத் தமிழ் நூல்கள் அழிந்து போயின-அழிக்கப்பட்டு விட்டன. ஆடல் கலை தொடர்பான சில செய்திகளையும் அவற்றைக் கூறும் சில நூல்களையும் பற்றிச் சிலப்பதிகாரம் முதலிய நூல்களாலும் அடியார்க்கு நல்லார் போன்ற உரையாசிரியர்களின் உரை களாலும் நாம் ஒரளவே இன்று அறிய முடிகின்றது.

பயிலிடம்:

‘முத்தமிழ்’ என்னும் பெயர் அமைப்பைக் கொண்டு இம்மூன்று கலைகளும் தமிழகத்தில் பல இடங்களிலும் பயிற்றப்பட்டன - பலராலும் பயிலப்பட்டன-என்னும் உண்மை விளங்கும். இக்காலத்தில் பல்கலைக் கழகம் என்னும் பெயருடைய பல்வேறு வகை நிறுவனங்கள் பல்வேறு கலைகளைப் பயிற்றுகின்றன. இவ்வாறே அக்காலத்திலும் பல நிறுவனங்களால் பல கலைகளும்