பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

183

பயிற்றப்பட்டிருக்கவேண்டும். அன்று இயல் தமிழைப் பயிற்றிய நிறுவனங்கள் பலவும், இசைத் தமிழைப் பயிற்றிய நிறுவனங்கள் பலவும், கூத்துத் தமிழைப் பயிற்றிய நிறுவனங்கள் பலவும், முத்தமிழையும் பயிற்றிய நிறுவனங்கள் சிலவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்திருக்க வேண்டும்.

சிற்சில கலைகளைப் பயிற்றச் சிற்சில இடங்கள்-ஊர்கள் சிறப்புடையனவாக இருந்திருக்க வேண்டும். இயல் தமிழுக்குச் சில இடங்களும், இசைத்தமிழுக்குச் சில இடங்களும், கூத்துத் தமிழுக்குச் சில இடங்களும் சிறந்தனவாய்த் திகழ்ந் திருக்கவேண்டும்.

முத்தமிழுள் கூத்துத் தமிழ் பயிற்றிய இடங்களுள் சிதம்பரம் ஒன்று. ஆனால், பத்தோடு பதினொன்று-அத் தோடு இது ஒன்று’ என்றாற்போல் சிதம்பரத்தைக் கூறி விடுவதற்கில்லை. கூத்துத் தமிழ் பயிற்றிய இடங்களுள் சிறந்தது சிதம்பரம்-தலையாயது சிதம்பரம். இதற்குச் சான்று வேண்டுமா;

நடராசர்:

சிவபெருமானின் தெய்வக் கூறுகளுள் தெய்வத் திரு மேனிகளுள் ஒன்றாகிய நடராசர் திருவுருவத்தை அறியாதார் இலர். நடராசர் என்றால், நடனம் (நாட்டியம்) ஆடுவதில் மன்னர் என்று பொருளாம் எனவே, நாட்டியக் கலையின் தந்தை-தலைவர் நடராசர் என்பது பெற்றாம். நடராசரது நாட்டியத்தின் வாயிலாகவே ஐந்தொழில்கள் (பஞ்ச கிருத்தியங்கள்) நடைபெறுகின்றன என்பதுபோன்ற மெய்யுணர்வுக் (தத்துவக்) கருத்துகளை ஈண்டு விரிக்காமல் விடுப்போம். இந்தக் கருத்து நாட்டியக் கலையின் பெருஞ் சிறப்புக்குத் தக்க சான்றாகும் என்ற அளவோடு அமைவோம்.