பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185

ளாடி’ என்றெல்லாம் பெயர் வழங்கப் பெறுகிறார். இறைவன் இவ்வாறு சிதம்பரத்தில் மன்றுள் ஆடும் நடராசராக ஆன வரலாறு யாதாக இருக்கலாம்?

புராணங்களில்-மெய்யுணர்வு நூல்களில் சிதம்பரம் பற்றியும் நடராசர் பற்றியும் எத்தனையோ கதைகள் வரலாறுகள் பேசப்பட்டுள்ளன. அவற்றை யெல்லாம் ஈண்டு நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய தில்லை. அவற்றிற் கெல்லாம் அடிப்படையாய் இருந்திருக்கக் கூடிய இயற்கை நெறி நின்றே ஆராயத் தொடங்குவோம்.

பண்டு, கூத்துத்தமிழின்-ஆடற்கலையின் தலைமையிட மாகச் (கேந்திரமாகச்) சிதம்பரம் திகழ்ந்தது. ஆடல்கலை யின் பல்கலைக்கழகம் (university)ஆகவும் இஃது இருந்திருக்கலாம். பல்வேறிடங்களிலிருந்து இங்கு வந்து கலைஞர்கள் ஆடல் பயின்றிருக்கலாம். ஆடல்கலையில் தேர்ந்தவர்கள் இங்கே வந்து அரங்கேற்றம் செய்து கொண்டிருக்கலாம். ஆடல்கலை பயிலும் இடம் மன்றம்’ என்ற பெயரால் பண்டுவழங்கப்பட்டிருக்க வேண்டும். ‘இறைவன் மக்களைப் படைத்தான்-இறைவன் உருவங்களை மக்கள் படைத்தனர் என்பர். மன்றத்தில் ஆடல் பயின்ற மக்கள், இறைவனது ஓவியத்தை எழுதி முதலில் மன்றத்தில் வைத்திருப்பர், இன்றும் இறை ஓவியங்கள் மன்றங்களில் இருப்பதைக் காண்கிறோம் அல்லவா? இறைவனது ஓவியத்தை எழுதிய மக்கள் நாட்டியம் ஆடும் தோற்றத்திலேயே எழுதிவைத் திருப்பர். பின்னர் அந்த ஓவியத்தைச் சிறப்பாகச் சிலை யாக வடித்துவைத்திருப்பர். சிதம்பரத்து மன்றத்தில், தொடக்கத்தில் நடராசர் சிலை ஏற்பட்டவரலாறு இப்படியாக இருந்திருக்கலாம்-என்பது ஒருவகை நுனித்த உய்த் துணர்வேயாகும். கருத்து வேறுபாடு உடையவர்கள் அருள் கூர்த்து பொறுத்துக் கொள்க.