பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/20

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

என்னும் பொருளிலேயே ஆளப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டுக்கள் சில வருமாறு, கலித்தொகையில்,

"தவலில் தண் கழகத்துத் தவிராது வட்டிப்பக்

கவறுற்றவடுவேய்க்கும் காமர்பூங் கடற்சேர்ப்ப" (130)

எனவும், திரி கடுகத்தில்,

”கழகத்தால் வந்த பொருள்கா முறாமை

பழகினும் பார்ப்பாரைத் தீப்போல்-ஒழுகல்

உழவின்கண் காமுற்று வாழ்தல் இம்மூன்றும்

அழகென்ப வேளாண் குடிக்கு” (42)

எனவும், ஆசாரக் கோவையில்,

"சூதர் கழகம் அரவம் அறாக்களம்

பேதைகள் அல்லார் புகாஅர் புகுவரேல்

ஏதம் பலவும் தரும்" (98)

எனவும், கழகம் என்னும் சொல் திருக்குறளில் உள்ளாங்கு ஆளப்பட்டி ருப்பதைக் காணலாம்.

திருக்குறளின் வழி

திருக்குறளுக்குப் பின் தோன்றிய சங்க இலக்கியங்களும் இடைக்கால இலக்கியங்களும் பிற்கால இலக்கியங்களும் திருக்குறளின் வழியைப் பின்பற்றிப் பல கருத்துக்களை வெளியிட்டிருக்கும் உண்மையைத் தமிழ் இலக்கியப் பயிற்சியாளர் அறிவர். இந்த அடிப்படையில் சங்க இலக்கியங்களே யன்றி, இடைக்கால-பிற்கால இலக்கியங்கள் சிலவும், திருக்குறளைப் போலவே ‘கழகம்’ என்னும் சொல்லைச் ‘சூதாடுகளம்' என்னும் பொருளில் கையாண்டிருப்பதையும் ஈண்டு மறப்பதற்கில்லை. எடுத்துக் காட்டிற்காக இடைக்கால இலக்கியம் ஒன்றையும் பிற்-