உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

19

கால இலக்கியம் ஒன்றையும் காண்பாம்; ஒன்பதாம் நூற்றாண்டினராகக் கருதப்படும் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணியில் கனகமாலையார் கலம் பகத்தில் உள்ள

"ஆகந் தானோர் மணிப்பலகையாக முலைகணாயாகப்
போகக் கேற்ற புனை பவழ வல்குல் கழகமாக
ஏக வின்பக் காமக் கவறாட வியைவ தன்றேல்
ஆக தோற்றிட் டடங்க லாண்மைக் கழகென்பவே"

என்னும் (101) பாடலிலும், பதினாறாம் நூற்றாண்டின ரான அதிவீரராம பாண்டியனார் இயற்றிய நைடதம் சூதாடு படலத்தில் உள்ள

"கள்ளுண விரும்புதல் கழகம் சேர்தல் மால்
உள்ளுறப் பிறர்மனை நயத்தல் ஒன்னலர்க்கு
எள்ளரு ஞாட்பினுள் இரியல் செய்திடல்
வள்ளியோய் அறநெறி வழுக்கும் என்பவே"

என்னும் (20) பாடலிலும் கழகம் என்பது சூதாடு களத்தைக் குறிப்பது காணலாம்.

உயரிய பொருளில்:

இதே நேரத்தில், கழகம் என்னும் சொல், இடைக்கால இலக்கியங்களிலும் பிற்கால இலக்கியங்களிலும், கம்ப ராமாயனத்தில் உள்ளரங்கு உயரிய பொருளில் கையாளப் பட்டிருப்பதையும் ஈண்டு மறப்பதற்கில்லை. இடைக்கால இலக்கியம் ஒன்றிலிருந்தும் பிற்கால இலக்கியம் ஒன்றிலிருந்தும் இதற்குச் சான்று காண்பாம்:

எட்டாம் நூற்றாண்டினராகக் கருதப்படும் நம்மாழ்வார் அருளியுள்ள திருவாய் மொழியில் உள்ள