பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/22

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

20          "குழகி எங்கள் குழமணன் கொண்டு கோயின்மை
                                   செய்து கன்மம் ஒன்றில்லை
          பழகியாம் இருப்போம் பரமே இத்திருவருள்கள்
          அழகியார் இவ்வுலகம் மூன்றுக்கும் தேவிமை
                                                  தகுவார் பலருளர்
          கழகம் ஏறேல் நம்பி உனக்கும் இளைதே கன்மமே”

என்னும் (6-2-6) பாடலில் கழகம் என்னும் சொல் திரு வோலக்கம்’ என்னும் உயரிய பொருளில் அமைந்திருப் பதை அறியலாம். அடுத்து, பதினாறாம் நூற்றாண்டினரான பரஞ்சோதி முனிவர் தமது திருவிளையாடற் புராணம் -திருநாட்டுப் படலத்தில்,

"கண்ணுதற் பெருங் கடவுளும் கழகமோ டமர்ந்து
பண்ணுறத் தெரிந் தாய்ந்தவிப் பசுந்தமிழ் ஏனை
மண்ணிடைச் சில இலக்கண வரம்பிலா மொழிபோல்
எண்ணிடைப் படக் கிடந்ததா எண்ணவும் படுமோ”

என்னும் (57) பாடலில், பழைய மதுரைத் தமிழ்ச் சங்கத்தைக் கழகம் என்னும் பெயரால் சுட்டியிருப்பது ஈண்டு மிகவும் குறிப்பிடத்தக்கது. கடவுளே கழகத்தில் அமர்ந்து தமிழ் ஆராய்ந்ததாக இப்பாடல் கூறுகிறது. இடைக்காலத் தவராகிய கம்பரும் கலைக் கூடங்களைத் தானே கழகம் எனக் கூறியுள்ளார். கம்பர் ஒன்பதாம் நூற்றாண்டினர் எனச்சிலரும், பன்னிரண்டாம் நூற்றாண்டி னர் எனச் சிலரும் கூறுகின்றனர். ஆகக்கூடியும், கம்பர் இடைக்காலத்தவர் என்பது உறுதி. இடைக்காலமும் பிற்காலமும் இருக்கட்டும்! பிற்காலத்திற்கும் பிற்காலமாகிய இக்காலத்தில், கல்லூரிக்கும் மேற்பட்ட பெரிய கல்வி நிலையத்தைப் பல்கலைக்கழகம்’ என நாம் அழைக்கிறோம். கழகம் என்னும் இந்த இனிய பெயரை, பல