பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

றிருப்பது சமயச் சார்பற்ற - சமய வெறியற்ற கம்பனது உயரிய பண்பை உலகறிய உணர்த்துவதும் எண்ணத்தக்கது.

கோசல நாட்டை அறிமுகப்படுத்தும் வாயிலாகத் தம் காலத்துத் தமிழகத்தைப் படம் பிடித்துக் காட்டியுள்ள கம்பன் கழகம் பற்றிய பாடல் தரும் படிப்பினையாவது: இந்தக் காலத்து இளந்தலைமுறையினர் திரைப்படக் கொட்டகைகளைச் சுற்றிக்கொண் டிருப்பதில் பெரும் பொழுதை-பெறுதற் கரிய நற்பொழுதைக் கொன்னே கழித்துவிடக் கூடாது; முன்னியது முடிக்கும் முருகனே போலமுயற்சி உடையவராய்-என்றும் இளைஞராய்-எழில் மிக்கவராய்-ஏற்றம் பெற்றவராய்த் திகழ வேண்டும்; உயரிய கழகங்கள் கண்டு உயர்ந்தோருடன் பழக வேண்டும்; உடலோம்ப உடற்பயிற்சி செய்ய வேண்டும்; நாடு காக்கப் படைப்பயிற்சியும் பெறவேண்டும்; பயனுள்ள பல்வேறு கலைக்கல்விகளையும் ஆராய்ந்து கற்று ஆக்கப் பணிகள் புரிய வேண்டும்; சமய வெறியின்றிச் சான்றாண்மையுடன் வாழவேண்டும் - என்னும் படிப்பினையாகும்.

ஆம்!. இத்தகைய அறிவுரையை அளிப்பதுதான் கம்பன் கழகம்-கம்பன் கண்ட கலைக்கழகம். எனவே. கம்பன் கழகம் இனியது-இன்றியமையாதது. கம்பன் கழகம் வாழ்க!