உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

29

மேடைத் தமிழும் மக்கள் மனப்பாங்கும் பற்றிச் சிறப்பாக ஒன்றும் அறுதியிட்டுக் கூற இயலாது. மேடைப் பேச்சாளர் பலரும் பல விதமான தமிழ் நடையில் பேசுகின்றனர். கேட்கும் மக்களின் மனப் பாங்கோ ஒரு விதமாயில்லை. ஒருவர்க்கு ஒரு வகை நடையும் மற்றொருவர்க்கு மற்றொரு வகை நடையும் வேறொருவர்க்கு வேறொரு வகை நடையுமே பிடித்தமாயிருப்பதைக் காண்கிறோம், அனைவருக்கும் பிடித்தமான முறையில் நடுத்தரமான நடையில் பேசுபவர் விரல் விட்டு எண்ணத்தக்க அளவு மிகச் சிலரே யாவர்.

மற்றும், கால் நூற்றாண்டுக்கு முன் பேசப்பட்ட மேடைத் தமிழ் வேறு; இப்போது பேசப்படும் மேடைத் தமிழ் வேறு. அப்பொழுது கேட்டவரின் மனப் பாங்கு வேறு; இப்போது சேட்பவரின் மனப்பாங்கு வேறு. இப் போது பேசப்படும் இலக்கிய மேடைத்தமிழ் வேறு; கதா காலட்சேப மேடைத் தமிழ் வேறு; அரசியல் மேடைத் தமிழ் வேறு; நாடக மேடைத் தமிழோ இன்னும் வேறாகும்.

ஒருவகை மேடைத் தமிழைக் கேட்டுச் சுவைப்பவர்கள், பிறவன்க மேடைத் தமிழை போர் அடிப்பதாகக் குறை கூறுகின்றனர். எல்லா வகை மேடைத் தமிழையும் கேட்டுச் சுவைக்கும் அப்பாவிகள்-ஐயோபாவங்கள் ஒரு சிலரே.

இந்தக் காலத்தில் அரசியல் மேடைத்தமிழைக் கேட்டுச் சுவைக்கும் மனப்பாங்கே பெரும் பாலான மக்களிடத்தில் இருப்பதாகத் தெரிகிறது. இப்பெரும்பாலருள்ளும் இளைஞரும் நடுத்தர வயதினருமே பெரும்பாலராவா, கதா காலட்சேபத் தமிழுக்குக் காது கொடுப்பவர்கள்