பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/50

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

48Orient Manuscripts Library, Madras) 1960 4b 4org) வெளியிடப்பட்டுள்ள பதிப்பில், 'நக்கீரர்’ என்னும் பெயர் இன்றி,

“இன்னவை பிறவும் நாலடி நானூற்றில் வண்ணத் தால் வருவனவும் எல்லாம் தூங்கிசைச் செப்பலோசை, பிறவும் அன்ன"--

என்றே உள்ளது. எனவே, சுவடிக்குச் சுவடி பாட வேறுபாடு உள்ளமை புலப்படலாம். யாப்பிலக்கணம் பற்றி வெண்பாவால் இயற்றப்பெற்ற “நக்கீரர் நாலடி நாற்பது’ என்னும் நூல் ஒன்று யாப்பருங்கல விருத்தியுரையால் நன்கு அறியப்பட்டுள்ளது. அந்த நினைவை வைத்துக் கொண்டு, சுவடி பெயர்த்து எழுதியவர், நாலடி நானூறு என்பதையும் நக்கீரர் 'நாலடி நானூறு’ என எழுதிவிட்டிருப்பாரா? ஒருவேளை, சமணமுனிவர் எழுதிய நாலடியாரினும் வேறானதாய் நக்கீரரால் ‘நாலடி நானூறு’ என்னும் பெயரில் வேறொரு நூல் எழுதப்பட்டிருக்கக் கூடுமா? சிலர் இவ்வாறு கூறியும் உள்ளனர். அதாவதுநானுாறு வெண்பாக்களால் நக்கீரர் யாப்பிலக்கண நூல் ஒன்று இயற்றியுள்ளார்-என்பதாகக் கூறுகின்றனர். இது உண்மையாயிருக்க முடியுமா? 'நாலடி நாற்பது' என்னும் பெயரில் நாற்பது வெண்பாக்களால் நக்கீரர் இயற்றியுள்ள யாப்பிலக்கண நூலை, நாலடி நானுாறு எனத்திரி’ பாக உணர்ந்து கொண்டு இவ்வாறு கூறுகின்றனரர்? மேலும், 'நக்கீரர் அடிநூல்' என்னும் பெயரில் யாப்பிலக் கண நூல் ஒன்று இருப்பதாகத் தொல்காப்பிய உரைகளிலிருந்து அறியப்படுகிறது; இந்நூலைச் சேர்ந்த 'ஐஞ்சி ரடுக்கலும்' என்னும் நூற்பா தொல்காப்பிய உரைகளில் எடுத்தாளப்பட்டுள்ளது-என்னும் செய்தியும் ஈண்டு ஒப்பு நோக்கற் பாலது.