உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

49

மற்றும், நக்கீரர் ஒருவரா-பலரா என்ற சிக்கலும் ஈண்டு எழுகிறது. எட்டுத்தொகை-பத்துப்பாட்டில் பாடல்கள் எழுதியுள்ள நக்கீரரும் நாலடியார் இயற்றியதாகத் கூறப்படும் நக்கீரரும் நாலடி நாற்பது என்னும் யாப்பிலக்கணநூல் எழுதியதாகக் கூறப்படும் நக்கீரரும், நாலடி நானூறு என்னும் யாப்பிலக்கணநூல் எழுதியதாகச் சொல்லப்படும் நக்கீரரும், நக்கீரர் அடிநூல் என்னும் யாப்பிலக்கணம் எழுதிய நக்கீரரும் ஒருவரா-அல்லது- வெவ்வேறானவரா?

மற்றும், நாலடியாரை நக்கீரர் இயற்றியதாகக் கூறுபவர்கள், ‘இந்த நக்கீரர் பத்துப் பாட்டுள் ஒன்றாகிய திருமுருகாற்றுப் படையை இயற்றிய நக்கீரர் அல்லர்; இவர் ஒரு சமண முனிவர் என்று கூறுகின்றனர். நாலடியார் இயற்றிய நக்கீரர் ஒரு சமண முனிவர் ஆதலின் நாலடியாரைச் சமண முனிவர் இயற்றியதாகக் கூறி வந்தனர்; பின்னர்ச் சமணமுனிவர்கள் இயற்றியதாகக் கூறத் தொடங்கிவிட்டனர்-என்பதாக இக்கொள்கையினர் கருதுகின்றனர்.

எது சரி? எது தவறு? ஒரே குழப்பமாயுள்ளது. இங்கே இன்னொரு கருத்தும் கூறுதற்கு இடம் உண்டு. யாப்பருங்கலம்-உறுப்பியலில் உள்ள, ‘இரண்டாம் எழுத்து ஒன்றுவதே எதுகை’ என்னும் (4ஆம்) நூற்பாவின் விருத்தியுரையிடையே,

(இன்னிசை வெண்பா)
“ஊசி யறுகை யுறுமுத்தம் கோப்பனபோல்
மாசி யுகுபனிநீர் வந்துறைப்ப-மூசும்
முலைக் கோடு புல்லுதற்கொன் றில்லாதான்
காண்மோ
விறக்கோடு கொண்டெரிக்கின் றேன்”