பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

50

இந் நற்கீரர் வாக்கினுள் கடையிரண்டையும் மூன்றாம் எழுத்து ஒன்றி வந்தவாறு கண்டு கொள்க”

என்னும் உரைப் பகுதி உள்ளது. மேலே உள்ள பாட்டு ‘நக்கீரர் வாக்கு’ எனக் கூறப்பட்டுள்ளது. இந்தவெண்பா அகப்பொருள் பற்றியதாகும். இவ்வாறு நக்கீரர் நானூறு வெண்பாக்கள் பாடி ‘நாலடி நானூறு’ என்னும் பெயரில் ஒருநூல் படைத்திருக்கலாம். இந்த நக்கீரர் நாலடி நானூறு என்னும் நூலை யாப்பருங்கல விருத்தியுரை சுட்டியிருக்கலாம். அங்ஙனமாயின், இந்த நாலடி நானூறு வேறு என்பதும் உய்த்துணரப்படலாம்.

நடுநிலையுடன் பல கோணங்களிலும் நின்றுஆராய்ந்து நோக்குங்கால், நாலடியார் பலர் பாடிய பாடல்களின் தொகுப்புநூல் என்றே தோன்றுகிறது. இது நீதியான தீர்ப்பு.

எழுத்தாளர் பகுதி

6. திரு.வி.க.வின் உரைநடை அழகு

அழகு என்பது பார்த்து மகிழக் கூடியது என்றே பலரும் கருதுவர். மக்களின் நடையழகைப் பார்த்து மகிழ்வதுண்டு. பெண்டிரின் நடையை ‘அன்ன நடை’ என்றும் அவர்தம் நடையின் சாயலை ‘மயிலின் சாயல்’ என்றும் புலவர்கள் புனைந்து கூறுவர். ஆடவரின் பெருமித நடையை ‘ஏறுபோல் பீடு நடை’ என்று வள்ளுவனார் குறிப்பிட்டுள்ளார். அதாவது, சிங்க நடை போன்ற பெரு-