பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52



பெருக, உரைநடை நூல்கள் அருகத் தொடங்கின. உரையாசிரியர்களின் உரையளவில் உரைநடை கண்ணை மூஞ்சைக் காட்டிக் கொண்டிருந்தது.பிற்காலத்தில், வீரமா முனிவர், ஆறுமுகநாவலர், முதலியோர் தமிழில் உரை நடை நூல்கள் எழுதத் தொடங்கினர். பின்னர், மீண்டும் தமிழில் உரைநடை நூல்கள் பெருகத் தொடங்கின. இப்போது உரைநடைநூல்களும் இலக்கியமாகக் கருதக்கூடிய அளவில் தமிழில் உரைநடை பெரிதும் அழகுபெற்றுள்ளது.

தமிழில் (திரு.வி.க.) திரு.வி.கலியாணசுந்தரனார், மறை மலை அடிகளார், சோமசுந்தர பாரதியார்,ந.மு. வேங்கடசாமி நாட்டார், மு. வரதராசனார் முதலியோரின் உரைநடை நூல்கள் மிகவும் சிறந்தனவாகும். - ஒவ்வொருவருடைய உரைநடையிலும் ஒவ்வொரு வித அழகைக் காணலாம். உலகில் கோடிக் கணக்கான மக்கள் உளர். ஒவ்வொருவரது முகமும் ஒவ்வொரு விதமாய் இருக்கும். ஒவ்வொருவருடைய குரலும் ஒவ்வாரு மாதிரியாயிருக்கும். ஆளைப் பார்க்காமல் குரலைக் கொண்டே இன்னாரென்று கூறிவிடலாம். வானொலியில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளைத் திடீரெனக் கேட்கத் தொடங்கிய வல்லுநர் சிலர், பாடுபவர் இன்னார்-மிருதங்கம் அடிப்பவர் இன்னார் -பிடில் வாசிப்பவர் இன்னார்-கடம் அடிப்பவர் இன்னார் - என்று கூறுவது உண்டு. வானொலியில் முதலில் பெயர் அறிவிக்கும்போது கேளாமல், இடையில் நாதசுரம் கேட்ட அளவிலேயே இது காரு குறிச்சி அருணாசலத்தின் வாசிப்பு என்று கூறும் திறமையாளர்கள் உண்டு. இதை மட்டும் என்னாலும் கூற முடியும்.

இது போலவே, பெயர் கூறாமல் படித்துக் காட்டினாலேயே, இது திரு.வி.க. வின் உரைநடை, இது மறைமலை யடிகளின் உரைநடை என்று கூற முடியும். இப்பெரியார்-