பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/56

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

54



அவரது உரைநடைக்கு அழகு தருவனவாம். அவருடைய நீண்ட வாக்கியங்களிலும் இனிமை ததும்பித் தவழும்.

இத்தகைய அழகுகள் பொருந்தத் திரு.வி.க. பல துறை நூல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் சில வருமாறு:தமிழ்ச்சோலை, தமிழ்த்தென்றல், இளமைவிருந்து, முடியா -காதலா-சீர் திருத்தமா?, இந்தியாவும் விடுதலையும் முருகன் அல்லது அழகு, மனித வாழ்க்கையும் காந்தியடிகளும், பெண்ணின் பெருமை, வாழ்க்கைவழி, உள்ளொளி, இராமலிங்க சுவாமிகள் திருவுள்ளம், சைவத்தின் சமரசம், சைவத் திறவு, சன்மார்க்க போதமும் திறவும், சமரச் சன்மார்க்கத் திறவு, தமிழ்நாடும் நம்மாழ்வாரும், இமயமலை அல்லது தியானம், கடவுள் காட்சியும் தாயுமானாரும், சித்த மார்க்கம், தமிழ் நூல்களில் பெளத்தம், நினைப்பவர் மனம், சைவ சமய சாரம், இருமையும் ஒருமையும்,அருகன் அருகே,மார்க்சியமும் காந்தியமும், இருளில் ஒளி,செத்துப் பிறத்தல், முதுமை உளறல்,வளர்ச்சியும் வாழ்வும்-முதலியன திரு.வி.க.வின் உரைநடை நூல்களாகும்.

இந்நூல்களேயன்றிப் பெரிய புராணத்திற்கும் காரைக்கால் அம்மையார் திருமுறைக்கும் குறிப்புரை எழுதியுள்ளார். திருக்குறளின் முதல் பத்து அதிகாரங்கட்கு விரிவுரை எழுதியுள்ளார். இவையேயன்றி, ‘தேச பக்தன்’ என்னும் செய்தித்தாளும், ‘நவசக்தி’ என்னும் வார இதழும் நடத்தியுள்ளார். திரு.வி.க. எழுதியுள்ள தனிக் கட்டுரைகட்கு அளவேயில்லை. செய்யுள் நூல்கள் சிலவும் இவர் இயற்றியுள்ளார்.

திரைப்பட நடிகர்களுள் சிலரது நடிப்பில் சிலர் மிகவும் ஈடுபாடு கொள்வதுண்டு. அதேபோன்று எழுத்தாளர்-