பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

57

“வழி நெடுகப் பசுமை உமிழும் மலைகளின் செறிவும் சூழலும் நிரையும் அணியும் உள்ளத்தைக் கவர்கின்றன. முகிற் குழாங்கள் கொண்டல் கொண்டலாக அசைந்தும் ‘ஆடியும் ஒடியும் மலைமுகடுகளிற் சூழ்ந்து தவழ்ந்து பாகைபோல் பொலியும் காட்சியும் அம்மலைகளின் உடல் புலனாகாதவாறு பசும்பட்டுப் போர்த்தாலெனப் பொழில்கள் துதைந்துள்ள அழகும் புலன்களை ஒன்றச் செய்கின்றன ...... புகைவண்டியின் விரைவில், இடையிடையே ஒடும் சிற்றருவிகளின் தோற்றம், பசிய வானில் மின்னொளி தோன்றி மறைவது போலப் புலப்படுகின்றது”.

இது நிற்க, சோழநாட்டின் இயற்கை வளத்தைப் பின்வருமாறு புனைவு செய்துள்ளார்:

‘வான்ப்பாய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி, பாட்டெனப் பரந்து, கிளை கிளையாய்ப் பிரிந்து, கால் காலாய் விரிந்து’ சோழ நாட்டை அணி செய்கிறது. காவிரிப் பயனைச் சோழ நாடு நுகருதலால், அது புனல் நாடாய்ச் சோறுடைத் தாயது போலும்”.

இந்தப் பகுதிகள் தமிழ்ச் சோலை முதலிய நூல்களில் காணக் கிடக்கின்றன. ‘முருகன் அல்லது அழகு என்னும் நூலில் அவர் இயற்கையைப் புனைவு செய்துள்ள உரைநடை அழகு ஒன்றினைக் காண்பாம்:

‘செம்பொன்னை உருக்கி வைத்தா லெனக் காட்சியளிக்கும் அந்தி வான் செக்கர் அழகும், கொண்டல் கொண்டலாக ஒடும் புயலின் அழகும், அது பொழியும் மழையின் அழகும், அத் தண் புனல் மணற் கற்களை அரித்தோடும் அருவியின் அழகும், பச்சைப் பசேலெனப் பெருங்காட்சியளிக்கும் பொழில்களின் அழகும் அவற்றில்