பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

67

சாலம் போலவும் இருக்கிறது என்று பாடியுள்ளார். திரிசிர புரம் சோடாவதானம் சுப்புராயச் செட்டியார் என்பவரோ, சுந்தரர் நீர் இல்லாத குளத்திலிருந்து நீரையும் முதலையையும் வரவழைத்து, அம் முதலை வாயிலிருந்து, அம் முதலை முன்பு விழுங்கிய சிறுவனை மீட்டுக் கொடுத்தாற் போல, ஒடிந்தும் மக்கியும் சிதைந்து போன ஒலைச் சுவடிகளிலிருந்து உயரிய நூல்களைத் தாமோதரனார் உரிய முறையில் மீட்டுத் தந்தார் என்று பாடியுள்ளார். சொர்ண நாதபுரம் சதாவதானம் இராமசாமி செட்டியார் என்பவர், ஞான சம்பந்தர் எலும்பைப் பெண்ணாக்கியது போல் தாமோதரர் துளை போட்ட ஒலைச் சுவடிகளை விலை போட்ட அச்சுச் சுவடிகளாக ஆக்கியுள்ளார் என்று பாடியுள்ளார். கல்லைப் பொன்னாக்கும் ஒருவகை இரசவாதம் போன்றது, தாமோதரரின் அச்சுப் பதிப்பு முயற்சி, என்று சுன்னாகம் அ.குமாரசாமி புலவர் கூறியுள்ளார்.

இவர்கள் அனைவரும் இருக்கட்டும்! தாமோதரம் பிள்ளை இறுதி எய்தியபோது, பழம் பெரும் பனையோலைச் சுவ்டிப் பதிப்பின் மாமன்னராகப் போற்றப் பெறும் டாக்டர் உ.வே.சாமிநாந ஐயர் அவர்களே, ‘பாம்பின கால் பாம்பறியும்’ என்றபடி, தாமோதரரின் பதிப்பின் சிறப்பைப் போற்றிப் புகழ்ந்து பாடி, அவரது பிரிவினால் ஏற்பட்ட தமது ஆற்றாமையை அறிவித்துள் ளார்கள். இதோ பாடல்

‘தொல்காப் பியமுதலாம் தொன்னூல் களைப்பதிப்
பித்து
ஒல்காப் புகழ்மேவி உயர்ந்தபண்பின்-அல்காத
தாமோ தரச்செல்வன் சட்டக நீத் திட்டதுன்பை
யாமோ தரமியம்ப வே’