பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

அடுத்து உள்ளது தமிழ்ச் சங்கப் பகுதி. ஆமாம், பன்னிரண்டாவது இது. உதிரியாகக் கிடந்த பாடல்கள் பலவற்றை நூலாகத் தொகுக்கும் பணி தமிழ்ச் சங்கத்தினுடையது என்பதை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

பதின் மூன்றாவதாகிய இது இலக்கிய வரலாற்றுப் பகுதி யாகும். புரட்சிப் பாவலர் ஒருவரின் இலக்கிய நூல்களின் வரலாறு குறித்து அதாவது விவரம் பற்றி இங்கே அறியலாம். மற்றும் அவருடைய இலக்கிய நூல்களால் உலக வரலாற்றின் சிறு சிறு பகுதிகளும் தெரியவரும்.

அடுத்த பதினான்காம் பகுதி ஏறக்குறைய முன்போன்றதே. ஆனால், வரலாற்று இலக்கியப் பகுதியாகிய இதில், ஒரே ஒருவரின் வரலாறு பற்றிய ஒரே ஒரு இலக்கிய நூல் பற்றி மாதிரிக்காக அறியலாம்.

மேற் கொண்டு, பொருளியல் பகுதியான பதினைந்தாவது பகுதி இதுதான். ஒரு வகையில் கோடீசுவரராக ஆகக் கூடிய வழிபற்றிய பரிந்துரையை இங்கே தெரிந்துகொள்ளலாம்.

மருத்துவப் பகுதி இல்லாத கண்காட்சி உண்டா என்ன! அடுத்ததான பதினாறாம். பகுதி இதுதான், உறுப்புகளுள் மிகவும் இன்றியமையாததான கண்ணின் நலத்திற்குப் பரிந்துரைக்கும் ஒருவகை மருத்துவத்தை இந்தப் பகுதியிால் அறியலாம்.

கண் காட்சியில் மர இனமாகிய தாவர இயல் (Botany) பகுதி இருக்குந்தானே? அதுதான் இந்தப் பதினேழாம்பகுதி. இதில் ஒருவகைச் செடிகளின் இயல்பு பற்றித் தெரிந்து கொள்ளலாம்.