பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

87

சிற்றரசர்கள், குறு நில மன்னர்கள், வள்ளல்கள், மல்லர்கள், புலவர்கள், கலைஞர்கள், பொது மக்கள் முதலிய பல தரப்பட்டவர்களின் வரலாற்றுக் குறிப்புகளும் ஆங்காங்கே பொதிந்து கிடக்கின்றன.

சங்க இலக்கியங்கள் என்றால் அவை யாவை? அவை எக்காலத்தவை.? என்று காணவேண்டு மல்லவா? தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று தமிழ்ச் சங்கங்கள் இருந்தனவாக வரலாறு கூறுகின்றது. மூன்று சங்கங்களிலும் எண்ணற்ற நூல்கள் தோன்றின. இந்த மூன்று சங்கங்களின் காலமும், அவ்வக் காலத்திலிருந்த அரசர்கள்-புலவர்கள்-இயற்றப் பெற்ற நூல்கள் தொடர்பான விவரங்களும் 'இறையனார் அகப்பொருள்’ என்னும் நூலின் உரையில் பின்வருமாறு குறிப்பிட்டுக் காட்டப் பெற்றுள்ளன. அந்த உரைப் பகுதி இதோ:

"தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என மூன்று சங்கம் இரீஇயினார் பாண்டியர்.

அவருள் தலைச்சங்கம் இருந்தார் அகத்தியனாரும், திரிபுரம் எரித்த விரிசடைக் கடவுளும், குன்று எறிந்த முருகவேளும், முரிஞ்சியூர் முடிநாகராயரும், நிதியின் கிழவனும் என இத்தொடக்கத்தார் ஐஞ்ஞூற்று நாற்பத்து ஒன்பதின்மர் என்ப. அவர் உள்ளிட்டு நாலாயிரத்து நானுாற்று நாற்பத்தொன்பதின்மர் பாடினார் என்ப. அவர்களால் பாடப்பட்டன: எத்துணையோ பரிபாடலும், முது நாரையும், முது குருகும், களரியாவிரையும் என இத்தெடக்கத்தன. அவர் நாலாயிரத்து நானுாற்று நாற்பதிற்றியாண்டு சங்கம் இருந்தார் என்பது. அவர்களைச் சங்கம் இரீஇயினார் காய்சின வழுதி முதலாகக் கடுங்கோன் ஈறாக எண்பத் தொன்பதின்மர் என்ப. அவருள் கவியரங் கேறினார் எழுவர் பாண்டியர் என்ப. அவர் சங்கம் இருந்து