பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

91


நாம் முன்பு கூறியபடி, பெரும்பாலும் இந்த இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டே தமிழர் வரலாறும் தமிழ் நாட்டு வரலாறும் வரலாற்றாசிரியர்களால் கணித்து எழுதப்பட்டுள்ளன. தமிழ் நாட்டின் பழைய வரலாற்றை ஓரளவாயினும் அறிந்து கொள்வதற்கு உறுதுணையான குறிப்புகள் சிலவற்றைத் தந்துகொண்டிருக்கும் சங்க கால இலக்கியங்கள் வாழ்க. அவற்றை இயற்றியருளிய புலவர் பெருமக்கட்கு நமது நன்றி உரித்தாகுக.

குறிப்பு:-இந்தக் கட்டுரை சங்க கால இலக்கியங்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டு எழுதப்பெற்றுள்ளது. சங்க காலத்திற்குப் பிற்பட்ட இலக்கியங்களை எடுத்துக் கொள்ளின் மிகவும் விரியு மாதலின் இம்மட்டோடு அமையலாம்.

உலகபொது அறிஞர் பகுதி

10. வள்ளுவரும் வள்ளலாரும் கண்ட
சமூக ஒருமைப்பாடு

'மனிதன் ஒரு சமூகப் பிராணி'(Man is a Social Animal) என்பது, கிரேக்க அறிஞர் அரிஸ்டாட்டில் என்பாரின் கூற்று. மாந்தர்கள் கூட்டமாகக் கூடி வாழும் உயிரிகள்-அதாவது- சமூகமாக வாழும் உயிரினத்தைச் சேர்ந்தவர்கள் -என்பது இதன் கருத்து. சமூகம் என்பதற்கு, மாந்தர் குழு- மாந்தர் குழு வாழ்க்கை என்பதாகப் பொருள் கூறலாம். இதுபற்றிய கருத்துகளையும் கொள்கைகளையும் கூறும் அறிவியல் 'சமூக இயல்', என்னும் பெயரால் குறிக் கப்படுகிறது. இதனை ஆங்கிலத்தில் 'சோசியாலஜி'