பக்கம்:கருத்துக் கண்காட்சி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

97

கண்டித்துள்ளார். கடவுளின் பெயராலும் வேள்வியின் பெயராலும் கூடக் கொலை கூடாது; தன்னுயிர் போல் மன்னுயிரைக் கருத வேண்டும். பிற உயிர்கட்கு வந்த நோயைத் தனக்கு வந்த நோயாகவே எண்ணி ஆவன புரிய வேண்டும். இன்றேல் பகுத்தறிவால் பயனில்லை -என்பது அவர்களது சமூகக் கோட்பாடு.

“கொலை வினைய ராகிய மாக்கள் புலைவினையர்
புன்மை தெரிவா ரகத்து’’ (329)

“அவிசொரிந் தாயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர்செகுத் துண்ணாமை நன்று’ (259)

“அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதினோய்
தன்னோய்போல் போற்றாக் கடை'-(315)

என்னும் திருக்குறள் பாடல்களும்,

‘கோடாது கொல்லா விரதமது கொள்ளாரைக்
காணில் ஒரு புல்லாக எண்ணிப் புறம்பொழிக’

‘உயிர்க் கொலையும் புலைப் புசிப்பும் உடையார்
கள் எல்லாம்
உறவினத்தா ரல்லர் அவர் புறவினத்தார்’

"வாடிய பயிரைக் கண்டபோ தெல்லாம்
வாடினேன் பசியினால் இளைத்தே
வீடுதோ றிரந்தும் பசியறா தயர்ந்த
வெற்றரைக் கண்டுளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின் றோரென்
நேருறக் கண்டுளம் துடித்தேன்
ஈடில் மாணிகளாய் ஏழைகளாய் நெஞ்சு
இளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”