பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8

கருவில் வளரும் குழந்தை

பிராஸ்டேட் சுரப்பி (Prostate gland) என்று பெயர். கலவியின்போது அதிலிருந்து சுரந்த நீர் முதலில் யோனியைச் சேர்ந்திருக்கிறது. இந்த நீர்தான் விந்தணுக்களுக்கு அதிக சக்தியைக் கொடுத்து வேகமாக முன்னேறிச் செல்ல உதவுகிறது. இருந்தாலும் பாவம் இவை ஒரு மணி நேரத்தில் சுமார் கால் அடி துரந்தான் நகர முடியும்.

யோனியிற் சேர்ந்தவுடனே அந்த லட்சக்கணக்கான விந்தணுக்களும் முன்னோக்கிச் செல்லத் தொடங்குகின்றன. அவற்றிற்குள்ளே ஒரே போட்டி, இறுதியில் ஒன்றே ஒன்றுதான் இந்தப் போட்டியிலே வெற்றியடைகிறது. அதைப்பற்றிப் பின்னல் ஆராய்வோம். அதற்குமுன் கருவுண்டாவதற்கு ஆதாரமான பெண் குறியைப் பற்றியும், பெண் குறியோடும் கருப்பையோடும் தொடர்புடைய சூல்பையில் உண்டாகும் அண்டத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளுவோம்.