பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பெண்மணி தருவது

11

அண்டம் அப்படி ஏராளமாக உண்டாவதுமில்லை; வெளிப்படுவதுமில்லை. அண்டம் மாதத்திற்கு ஒன்றுதான் உருவாகிறது. ஒரு மாதத்திலே ஒரு சூல் பையில் ஒரு அண்டம் உருவானால் அடுத்த மாதத்திலே மற்றொறு சூல்பையிலே ஒரு அண்டம் உருவாகும். இவ்வாறு இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மாறிமாறிச் சூல்பைகள் ஒவ்வொரு அண்டத்தைத் தருகின்றன. பருவமடைந்தது முதல் பெண்களுக்குச் சுமார் 45 வயது ஆகும்வரை இச்செயல் நடைபெற்று வரும். அண்டம் விந்தணுவைவிடப் பெரியதுதான். இருந்தாலும் கண்ணுக்குச் சட்டென்று தெரியும்படி அவ்வளவு பெரியதல்ல. கூர்ந்து நோக்கினால்தான் அதைக் கண்டுபிடிக்க இயலும்.

சூல்பை ஒவ்வொன்றும் சுமார் 1½ அங்குல நீளம் உள்ளது. இதில் உள்ள நார்போன்ற இழையத்தில் (Tissue) உருண்டையான பை இருக்கிறது. அதில் தான் அண்டம் தயாராகிறது. சூல்பைக்குப் பக்கத்திலே பூசணிப் பூவைப்போல விரிந்திருக்கிறதே அது தான் அண்டக் குழாயின் வாய். சூல் பையில் உருவான அண்டம் அதிலே விழுகிறது. விழுந்து மெதுவாக அண்டக் குழாய் வழியாகக் கருப்பையை நோக்கி நகரத் தொடங்குகிறது. எப்படி நகருகிறது என்பதும் ஒரு ஆச்சரியம்தான். சுமார் மூன்று நாட்கள் நகர்ந்து அது நான்கு அங்குல தூரத்தைத் தாண்டிவிடுகிறது! அப்படி அது பயணம் செய்து கொண்டிருக்கும்போது ஏதாவது ஒரு விந்தணு அதை அடைந்து உள்ளே நுழைந்தால் கருவாக