பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

கருவில் வளரும் குழங்தை

அண்டத்திலுமுள்ள ஒரு முக்கியமான பொருளைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

விந்தணுவையும், அண்டத்தையும் நுட்பமாக ஆராய்ந்து பார்த்தால் அவற்றில் நிறக்கோல்கள் (Chromosomes) என்ற மிக நுண்ணிய பொருள்கள் இருப்பது தெரியவரும். ரப்பரிலிருந்து மிக மெல்லிய தாக நூலிழுத்து அதை வெவ்வேறு அளவிலே சிறு சிறு துண்டங்களாகச் செய்து போட்டால் எப்படி யிருக்குமோ? அப்படி யிருக்கின்றன. விந்தணுவும், அண்டமும் முதிர்ச்சியடையாம லிருக்கும்போது அவை 24 ஜோடி நிறக்கோல்கள் இருக்கின்றன.

ஒவ்வொரு ஜோடியிலுமுள்ள நிறக்கோல்கள் ஒரேமாதிரி உருவமுடையவை. ஆனால், ஒரு ஜோடியைப்போல மற்றொரு ஜோடி இருக்காது. அதனால், 24 ஜோடிகளையும் தனித்தனி பிரித்து வைக்க முடியும். இன்னும் இதிலே சிறப்பு என்னவென்றால் விந்தணுவிலுள்ள ஒவ்வொரு ஜோடியைப் போலவே உருவமுள்ள ஜோடியொன்று அண்டத்திலுமிருக்கும்.

மேலே சொன்னதில் ஒரு சிறு திருத்தம் உண்டு. அதாவது விந்தணுவிலுள்ள ஒரு ஜோடி நிறக்கோல்