பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பக்குவமடைந்த விந்தணுவும் அண்டமும்

16

மட்டும் உருவத்திலே ஒன்றுக்கொன்று வேறுபட்டிருக்கும். அந்த ஜோடிக்கு இணையாக அண்டத்தில் உள்ள ஜோடியில் அப்படி வேறுபாடு இருக்காது. அந்த ஜோடியில் உள்ள இரண்டும், விந்தணுவில் வேறுபாடுடைய ஜோடியிலுள்ள ஒரு நிறக்கோலும் ஆக மூன்றின் உருவமும் ஒரே மாதிரி இருக்கும். மற்ற ஒன்று மட்டும் வேறுபட்டுத் தோன்றும். இந்த உருவ வேறுபாடுடைய நிறக்கோல்கள் மிக முக்கியமானவை. அவற்றைப்பற்றிப் பின்னால் தனியாகக் கவனிப்போம்.

முதிராத விந்தணுவிலும், அண்டத்திலும் 24 ஜோடி நிறக்கோல்கள் இருக்கின்றன என்று கண்டோம். ஆதலால் விந்தணு அண்டத்தில் பாய்ந்த பிறகு அதிலே 48 ஜோடி நிறக்கோல்கள் இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் அப்படி இருப்பதில்லை. விந்தணுவும் அண்டமும் முதிர்ச்சியடைந்த பிறகுதான் வெளிப்பட்டு ஒன்றையொன்று சந்திக்கின்றன என்று முன்பே சொன்னேன். அப்படி முதிர்ச்சியடையும்போது அவற்றிலுள்ள நிறக்கோல்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துவிடுகின்றது. முதிர்ச்சியடையும் போது ஏற்படுகின்ற மாறுதல்களைக் கீழ்க்கண்ட படம் காண்பிக்கிறது.

முதிராத விந்தணுவிற்கும், அண்டத்திற்கும் இரண்டிரண்டாகப் பிரியக் கூடிய சக்தியுண்டு. அந்த சக்தியால் முதிராத விந்தணு முதலில் இரண்டாகப் பிரிகின்றது. அப்போது அதிலுள்ள நிறக்