பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இரண்டறக் கலந்து ஓருயிராதல்

19

விந்தணுப் பாய்ந்த அண்டத்திற்குப் பூரித்த அண்டம் (Fertilised egg) என்று பெயர். அது பல வகையான மாறுபாடுகளை அடையத் தொடங்குகிறது. முதலில் இரண்டாகப் பிரிகிறது, இரண்டு

(பூரித்த அண்டம் இரண்டாகவும், நான்காகவும், எட்டாகவும், பதினறாகவும் இவ்வாறு இரட்டித்துப் பெருகுவதைப் படம் காண்பிக்கிறது.)

நான்காகிறது. நான்கு எட்டாகிறது. பூரித்த அண்டம் இப்படிப் பிரிந்து பிரிந்து பெருகிப் பல அணுக்களின் (Cells) கூட்டமான ஒரு பிழம்பாகத் திரள்கின்றது.