பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

இரண்டறக் கலந்து ஓருயிராதல்

21

இருக்கும். ஐந்து வாரங்களுக்குப் பிறகு அதன் உருவம் ஏறக்குறைய ஒரு மொச்சைப் பருப்பளவு இருக்கின்றது. அவ்வளவு சிறியதாக இருந்தாலும் உடம்பிலுள்ள உறுப்புக்களின் அமைப்பெல்லாம் அதில் உருவெடுத்துவிடுகின்றது. நரம்புகளும், துடிக்கும் இதயமும், பிறவும் காணப்படுகின்றன.

எட்டு வாரமான கரு சுமார் ஒரு அங்குல நீளமிருக்கும். அதற்குக் கால், கை விரல்களும் முளைத்து விடுகின்றன.

முதல் மாதத்தில் அடிக்கத் தொடங்கிய இதயம் வாழ்நாள் முழுவதும் தனது கடமையை நிற்காமல் செய்து வருகின்றது.