பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மாயப் பிறவி

31


கருவில் முதன் முதலாக இதயமும், மூளையும் தோன்றத் தொடங்குகின்றன; உணவுக் குழாய், நரம்புகள், ரத்தக் குழாய்களும் உருவாகின்றன. இவையெல்லாம் அண்டம் பூரித்த இருபத்தைந்து முப்பது நாட்களுக்குள் நடந்துவிடுகின்றன.

கருவின் அமைப்பில் மூன்றில் ஒரு பாகம் பின்னால் தலையாக மாறும் பாகமாக இருக்கிறது. இதயம் பெரிதாக இருப்பதால் அந்த இடத்தில் கருவின் உடம்பு உப்பியதுபோல் காண்கிறது.

முன் பக்கத்தில் உள்ள படத்தில் கருவின் உறுப்புகளெல்லாம் விளக்கப்பட்டுள்ளன.

படத்தைப் பார்ப்பதிலிருந்து இக்கரு மிகப் பெரியதாக இருக்குமென்று கருதவேண்டாம். கருவின் உருவம் இங்கு இருபது மடங்கு பெரிதாக்கிக் காண்பிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக இப்பொழுது கரு ஒரு மொச்சைப் பருப்பு அளவே இருக்கும்.

கண், மூக்கு என்பவையெல்லாம் இப்பொழுதே அவற்றின் கடைமைகளைச் செய்யும் ஆற்றல் வாய்ந்தவை என்று நினைக்கக்கூடாது. பின்னல் பூரணமாக வளர்வதற்கு இப்பொழுதே உண்டான அரும்புகள் என்றுதான் அவற்றைக் கொள்ள வேண்டும்.

கண்ணுக்குத் தெரிவதுகூட அரிதாகவுள்ள அவ்வளவு சிறிய அண்டம் பூரித்த ஒரு மாதத்திற்குள்ளே மனித உறுப்புக்களின் வளர்ச்சிக்கு வேண்டிய முளைகளையெல்லாம் பெற்று ஆச்சரியமாக வளர்ந்துவிடுகிறது. இது ஒரு பெரிய விந்தையல்லவா?