பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பார்வை மெய் வாய் செவி கால் கைகளென்ற...

35


இரண்டாவது மூன்றாவது மாதங்களிலே கை கால்கள் எவ்வாறு வளர்ந்து அமைகின்றன என்பதைப் படத்தில் காணலாம்.

ஏதோ ஒரு அரும்பைப்போல நீட்டிக்கொண்டிருந்த பாகங்கள் கைகளாகவும், கால்களாகவும்,

அழகான விரல்களோடு வளர்ந்துவிடுகின்றன. மூன்றாம் மாதத்திலே பல் வளர்வதற்காக முளைகள் ஏற்படுகின்றன. கரு தன் கையையும் காலையும் நன்கு அசைக்க முடிகிறது. ஆனால் அதைத் தாய் கூட அந்தச் சமயத்தில் அறிந்துகொள்ள முடியாது.