பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


நாளொரு மேனி

பொழுதொரு வண்ணம்

வளர்ச்சி

கரு வளர்கின்றபோது மூன்றாவது வாரத்திலே அதன் இதயம் அமையத் தொடங்குகிறது. இரண்டாம் மாதத்திலே அந்த இதயம் வலது பாகம், இடது பாகம் என இரு பிரிவாகப் பெரும்பாலும் உருவாகின்றது. ஆனால் அவ்விரு பாகங்களில் ஒவ்வொன்றும் மேல், கீழென மேலும் பிரிவடைந்து சாதாரணமாக மனித உடம்பிலே இதயம் வேலை செய்வதுபோல வேலை செய்வதற்கு இப்பொழுது முடியாது. ஏனென்றால் கருவிற்கு வேண்டிய உணவும், பிராண வாயுவும் தாயிடமிருந்து கருக்குடையின் மூலம் கிடைத்துக்கொண்டிருக்கிறது. குழந்தை பிறந்து நேரடியாகத் தனது சுவாசப் பையை பயன்படுத்தி மூச்சு விடவும், வாய் வழியாகப் பாலையுண்டு வயிற்றில் உணவைக் சீரணிக்கவும் தொடங்கும்வரை இம்மாதிரியான மாறுதல் ஏற்பட முடியாது.

இதயம் முழு வளர்ச்சியடையாவிட்டாலும் தனது வேலையை வெகு சீக்கிரத்திலேயே தொட்ங்கி