பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கருவில் வளரும் குழந்தை

விடுகிறது. முதன் முதலாக இதயம் எப்பொழுது அடிக்கத் தொடங்குகிறது என்று அறிந்துகொள்ள நாம் அனைவரும் ஆசைப்படுவோம். மனிதக் கருவை வைத்துக்கொண்டு நேரடியாக இதை முடிவு செய்ய இதுவரை இயலவில்லை. ஆனால் சில பிராணிகளின் கருக்களை வைத்துக்கொண்டு அவற்றின் இதயம் எப்பொழுது முதல் தடவையாக அடிக்கிறது என்பதை ஆராய்ச்சி செய்து கண்டிருக்கிறார்கள். இந்த ஆராய்ச்சியைக்கொண்டு ஊகித்துப் பார்த்தால் மனிதக் கருவின் இதயம் மூன்றாவது நான்காவது வாரத்திலே அடிக்கத் தொடங்கும் என்று முடிவு கட்டலாம்.

மூன்றாவது நான்காவது மாதங்களில் தான் கரு வேகமாக வளர்ந்து சுமார் 8 அங்குல நீளமுள்ளதாகிறது. உடம்பின் தோற்றமும் ஒருவாறு திருப்தியாக மாறிவிடுகிறது. நான்காம் மாதத்திலே கரு தனது கை கால்களே ஆட்டுவதைத் தாய் உணர்ந்து கொள்ள முடியும்.