பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

கருவில் வளரும் குழந்தை


வேர்வைச் சுரப்பிகள் தோலின் அடிப்பாகத்தில் அமைகின்றன. ஆனால் ஏழாம் மாதம்வரை அவற்றிலிருந்து வேர்வை வெளியே வருவதற்குத் துவாரங்கள் உண்டாவதில்லை. அப்படி துவாரங்கள் உண்டாவதும் அவசியமில்லை. குழந்தை பிறக்கும் வரையில் அதன் உடம்பின் வெப்ப நிலையைத் தாயின் உடம்பே சரிப்படுத்திக் கொள்வதால் வேர்வை வெளிப்பட வேண்டிய தேவையொன்றும் கிடையாது.

ஆறாம் மாதத்திலே குழந்தை பிறந்தால் சில மணி நேரங்களுக்குமேல் உயிர் வாழ்தல் அரிது. ஆனால் ஏழாம் மாதத்தில் பிறந்தது உயிர் வாழ முடியும். முடியுமென்றால் எளிதில் முடியுமென்று எண்ணாதிர்கள். அதற்கு எவ்வளவோ கவனமும் பாதுகாப்பும் வேண்டியிருக்கும்.

எட்டாவது ஒன்பதாவது மாதங்களிலே குழந்தை உலகிலே தோன்றுவதற்குத் தயாராகக் கடைசி ஏற்பாடுகளையெல்லாம் செய்துகொள்ளுகிறது. இம்மாதங்களிலே அதன் தோற்றம் இன்னும் செம்மைப்பட்டுவிடும். இரண்டாம் மாதத்திலிருந்து பல நரம்புகள் மூளையுடன் தொடர்பேற்படுத்திக் கொண்டே வருகின்றன. இப்பொழுது இன்னும் பல நரம்புகள் தோன்றி மூளையுடன் தொடர்பு கொள்கின்றன.

ஒரு சிறு அணுத்திரளாக இருந்த கரு இப்பொழுது தாயின் வயிற்றிலே பெரியதோர் இடத்தை அடைத்துக்கொள்கிறது. அதற்குள்ளே குறுகிக்