பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கருவில் வளரும் குழந்தை


கிடந்தாலும் அது சும்மா இருப்பதில்லை. கையையும் காலையும் வீசி ஆட்டும்; உடம்பை நெளிக்கும். சில சமயங்களிலே தூங்குவதுபோல அசைவில்லாமலிருக்கும். பிறகு மறுபடியும் நெளியும்.

இப்படி வளரும் கருவிற்கு இடம் கொடுப்பதற்காகத் தாயின் வயிறு பெருக்கின்றது. 18-வது படத்திலிருந்து அம்மாறுபாட்டை அறியலாம்.

பனிக்குடத்திற்குள்ளே கரு எந்த விதமாகவும் இருக்கலாம். ஆனால் அது சாதாரணமாக