பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



9

பத்து மாத விந்தை

பிறப்பு

த்து மாதம் சுமந்து பெற்றெடுத்த தாய் என்று சாதாரணமாகச் சொல்லுகிறோம். குழந்தையின் பிறப்பைப் பத்து மாத விந்தை என்று சொல்லலாம். கருவுற்றதிலிருந்து மாதங்களைக் கணக்கிட்டால் குழந்தை பிறக்கும்போது மாதங்கள் பத்தாகலாம். உண்மையில் தாயின் உடம்பில் கரு வளர்வது 9 மாதத்திற்குத்தான் ; அதாவது சுமார் 270 நாட்கள் கரு வளர்ந்து உலகில் பிறக்கிறது. ஆனால், எந்த நாளில் குழந்தை பிறக்கும் என்று திட்டமாகச் சொல்ல முடியாது.

ஒன்பது மாத காலமாகச் சுருங்கி நெளியாமல் இருந்த கருப்பை இப்போது அப்படிச் செய்யத் தொடங்குகிறது. அதைச் சுருங்காமல் தடுக்கும் மஞ்சலரி போன்ற உருப்புக்களின் சக்தி குறைந்து விட்டது போலும். மேலும் கருப்பையானது சுருங்கிக் குழந்தையை வெளியில் தள்ளுவதற்குச் சாதக மாகவும் சில சுரப்பிகள் வேலை செய்திருக்க வேண்டும்.