பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முன்னுரை

நாள்தோறும் குழந்தைகள் பிறந்துகொண்டே இருக்கின்றன. அவை வளர்ந்து முதிர்ச்சி பெற்று எதிர்கால உலகத்திலே என்னென்னவோ செய்யப் போகின்றன. இக்குழந்தைகளைப் பொருத்துத்தான் எதிர்கால உலகமே இருக்கின்றது.

குழந்தைகள் எப்படித் தோற்றங் கொள்ளுகின்றன, அவற்றின் மனம் எவ்வாறு மலர்கின்றது, அவற்றின் தன்மைகளுக்கும், திறமைகளுக்கும் பெற்றோர்கள் எவ்வளவு தூரம் பொறுப்பாளிகளாகின்றனர் என்பன போன்ற உண்மைகளையெல்லாம் நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா ? சாதாரணமாக ஒவ்வொரு ஆணும், ஒவ்வொரு பெண்ணும் தந்தை, தாய் என்ற நிலையை அடையத்தான் செய்கிறார்கள். அப்படியானல் அவர்களுக்கு இந்த உண்மைகள் தெரிந்திருக்க வேண்டாமா ? நன்மக்களைப் பெற்றுச் சமூகத்திற்கு வழங்குவது இல்லறத்தைக் கடைப்பிடிப்பவர்களின் முக்கியமான கடமை என்று நாம் ஒப்புக்கொள்ளுகிருேம். அதற்கு வேண்டிய முக்கியமான அறிவை நாம் பெற்றிருக்க வேண்டும்.

எனக்கு ஒரு பெரிய ஆசை. ஒவ்வொருவரும் குழந்தை சம்பந்தப்பட்ட நான்கு முக்கியமான உண்மைகளை உணர்ந்திருக்க வேண்டும். தாய், தந்தையர்கள் குழந்தையின் வாழ்க்கைக்கு அளிக்கும் பாரம்பரியத் தன்மைகள் யாவை, அவை எவ்வாறு சூழ்நிலையால் பாதிக்கப்படுகின்றன, குழந்தை எவ்வாறு கருப்பையிலே உருவெடுத்து வளர்ச்சியடைந்து பிறக்கிறது, அதன் மனம் எவ்வாறு மலர்ச்சியடைகின்றது என்ற இந்நான்கையும் எல்லோரும் அறிந்திருக்க வேண்டும்.

இவற்றை, விளக்கக்கூடிய சிறுசிறு நூல்கள் எழுத வேண்டுமென்று உறுதி செய்துகொண்டேன். குழந்தை உள்ளம் என்ற நூலில் அதன் மன மலர்ச்சியைப்பற்றி