பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கருவில் வளரும் குழந்தை

கோல் (Y Chromosome) என்றும் பெயர். இந்த இரண்டு நிறக்கோல்களினால்தான் குழந்தை ஆணென்பதும் பெண்ணென்பதும் தீர்மானமாகிறது.

முதிர்ந்த விந்தணுவிலே 24 நிறக்கோல்கள் தானிருக்கும் என்று நமக்குத் தெரியும். அவை ஜோடிக் கொன்றாகப் பிரிந்து வந்தவை என்பதும் நமக்குத் தெரியும். ஆதலால் ஒரு முதிர்ந்த விந்தணுவிலே எக்ஸ் நிறக்கோலோ அல்லது ஓய் நிறக்கோலோ தான் இருக்க முடியும்.

முதிராத அண்டத்திலேயுள்ள 24 ஜோடிக் நிறக்கோல்களில் ஒவ்வொரு ஜோடியும் தம்முள் உருவத்தில் ஒத்திருக்கின்றன. அவற்றிலே ஒய் நிறக்கோல் கிடையாது. ஒரு ஜோடியில் எக்ஸ் நிறக்கோல்கள்தான் இரண்டு இருக்கின்றன. ஆதலால் முதிர்ந்த அண்டத்திலே எப்பொழுதும் எக்ஸ் நிறக் கோல் இருக்கும்.

அண்டம் பூரித்துக் கருவாக மாறுவது இரண்டு வகையாக நிகழலாம். எக்ஸ் நிறக்கோல் உள்ள விந்தணுப் பாய்ந்து பூரிப்பது ஒருவகை; ஒய் நிறக் கோல் உள்ள விந்தணுப் பாய்ந்து பூரிப்பது மற்றொரு வகை.

எக்ஸ் நிறக்கோல் உள்ளது பாய்ந்து பூரித்தால் பிறக்கும் குழந்தை பெண்ணாகும்; ஒய்நிறக்கோல் உள்ளது பாய்ந்து பூரித்தால் பிறக்கும் குழந்தை ஆண். ஆகவே தந்தைதான் குழந்தை ஆணாவ