பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

கருவில், வளரும் குழந்தை

குழந்தையின் உடலமைப்பிற்கும், உள்ளத் திறமைகளுக்கும், தன்மைகளுக்கும் பெரியதோரளவில் பொறுப்பாளிகளாக இருக்கிறார்களென்றும், அவற்றிற்கு நிற்க்கோல்களிலுள்ள ஜீனுக்களே காரண மென்றும் குறிப்பிட விரும்புகிறேன்.

பாரம்பரியமாகக் கிடைத்த தன்மைகளும், திறமைகளும் அவற்றிற்கு ஏற்ற சூழ்நிலையின் உதவியைக் கொண்டே மலர்ச்சியடைகின்றன. பாரம்பரியமாக ஒரு திறமை ஏற்பட்டிருந்தாலும் அது வெளிப்பட்டுப் பிரகாசிப்பதற்கு ஏற்ற சூழ்நிலையில்லாவிடில் அது மங்கி மறைந்துபோகும். ஆதலால், பாரம்பரியத்தைப்போலவே சூழ்நிலையும் முக்கிய மானதாகும்.

பாரம்பரியம் முக்கியமா, சூழ்நிலை முக்கியமா என்று கேட்டால் இரண்டும் முக்கியம் என்றுதான் சொல்ல வேண்டும். மீன் நீந்துவதற்கு அதன் வால் முக்கியமா அல்லது தண்ணீர் முக்கியமா என்றால் எதை முக்கியமென்று சொல்லுவது? இவ்விரண்டிலும் எது இல்லாவிட்டாலும் மீன் நீந்த இயலாது. இந்த உபமானத்தைக் கொண்டு பாரம்பரியம், சூழ்நிலை ஆகிய இரண்டின் சமமான அவசியத்தைப் பற்றி உணர்ந்துகொள்ளலாகும்.

குழந்தையை நன்கு வளர்ப்பதற்குப் பெற்றோர்களுக்கு இவையெல்லாம் தெரிந்திருக்க வேண்டும். அத்துடன் குழந்தையுள்ளம் எவ்வாறு மலர்ச்சியடை கிறதென்பதைப்பற்றிய அறிவும் வேண்டும்.