பக்கம்:கருவில் வளரும் குழந்தை.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலைச்சொல் விளக்கம்

(அகர வரிசையில்)

அணு (Cell)-உயிர்ப் பொருளின் வளர்ச்சிக்கு ஆதாரமானது. மிக நுண்ணியது. இதை இருவகையாய்ப் பிரிக்கலாம். வேறு உயிர் உண்டாவதற்குக் காரணமாகிய விந்தணுவும், அண்டமும் ஒரு வகை. இவற்றை உயிரணுக்கள் என்று கூறலாம். உடலிலுள்ள உறுப்புக்களாக வளரும் அணுக்கள் மற்ருெரு வகை. இவற்றிற்கு சோமா (Soma) என்று பெயர். அணுவென்ற பெயராலேயே மிக நுட்பமான சடப் பொருளும் குறிக்கப்படுகிறது. அதை ஆட்டம் (Atom) என்றும், இங்கு குறிக்கப்பட்டுள்ள வளரக்கூடிய அணுவை ஸெல் என்றும் ஆங்கிலத்தில் வேறுபடுத்திக் கூறுகிறார்கள்.

அண்டம் (Ovum)-பெண்ணின் சூல்பையில் உண்டாகும் உயிரணு. சூல்பைகள் இரண்டிருக்கின்றன. அவற்றில் ஒன்றிலிருந்து சாதாரணமாக ஒரு மாதத்திற்கு ஒன்றும் மற்றதிலிருந்து அடுத்த மாதத்திற்கு ஒன்றுமாக மாறி மாறி மாதம் ஒரு அண்டம் தயராகி முதிர்ச்சியடைந்து வெளிப்படும். வெளிப்பட்டுச் சுமார் இரண்டு மூன்று நாட்கள் உயிரோடிருக்கும். முதிர்ந்த அண்டத்தில் 24 நிறக்கோல்கள் தானிருக்கும்.

அண்டக் குழாய்-சூல்பையிலிருந்து அண்டம் கருப்பைக்கு வருவதற்கு வழியாக உள்ள குழாய்.

எக்ஸ் நிறக்கோல் (X Chromosome)-புதிய உயிரின் பாலை நிர்ணயிப்பது, மானிட இனத்தில் இருபாலார் அணுவிலும் 24 ஜோடி நிறக்கோல்கள் இருக்கும். அவற்றில் ஆண் அணுவில் ஒன்றும், பெண் அணுவில் இரண்டுமாக எக்ஸ் நிறக் கோல் உண்டு. முதிர்ந்த விந்தணுவில் எக்ஸ் நிறக்கோல்