பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

 என்னவென்றால், அறைகளுக்குக் கூலி, அதாவது வாடகை கட்டவேண்டும். மாளிகையைக் கட்ட கொஞ்சமா பணம் செலவாகியிருக்கும்?

அப்பெருமனேக்கும் பெயர் இருந்தது.

பெயர்: "அழகு மாளிகை!"

உண்மையிலேயே அழகு மாளிகை வாசம் செய்து கொண்டிருந்த இடம்தான் அது!

வெளியேறிய அந்த இணையை ஏறெடுத்துப் பார்த்தான் சிவஞானம். அதே நேரத்தில் ரிக்ஷாக்காரனும் அவர்களைக் குறிப்பாக நோக்கினன்.

சிவஞானத்தின் கண்கள் கலங்கத் தொடங்கின. அந்த 'லாட்ஜின்' தரிசனம் அவனை எங்கெல்லாமே பிடர் பற்றி இட்டுச் செல்லத் தொடங்கியது. காலத்தின் பனி மூட்டத்தைக் குடைந்து கொண்டு சென்றது அவனது மனத்தேர். 'மல்லி !...

மை டியர் மல்லிகா !...'

காலத்தின் கழிந்த நாட்கள் ஏந்தி நின்ற மனமோகன நாட்களுக்கென்று இப்படியொரு மாயக் கவர்ச்சியா?

சிவஞானம் அந்த ஒரு நிகழ்வின் நினைவில் மனம் லயித்தான்.

அப்பொழுது, இந்த 'அறுபத்தேழு தேர்தல்' சூடு பிடித்துக்கொண்டிருந்த நேரம். கொடி வகைகளும் சுவரொட்டித் தினுசுகளும் நகரமெங்கும் விதியின் புதிர்ப் புன்முறுவலாகச் சிரித்துக்கொண்டிருந்த வேளை அது.

சிவஞானம் தன் ஆருயிர்த்துணே மல்லிகாவுடனும் 'பச்சை மண்ணான' மதலேயுடனும் சென்னைக்குப் பயணப்படத் தஞ்சைக்கு வந்திருந்தான். ஜனதாவில் சென்னைக்கு இரவு புறப்படத் திட்டம். காலையில் தஞ்சைக்கு வந்துவிட்டான். அப்போதுதான் அவர்களது புறப்பாட்டிற்கு 'சுபவேளை' கைகொடுத்திருந்தது. வந்தவன் நேராக அழகு மாளிகைக்கு வந்தான். கிறிஸ்துமஸ் பண்டிகை நாளானதால் இடம் கிடைப்பது அரிதாக இருந்தது. என்றாலும், அவனுக்கு மாடியிலே இடம் கிடைத்தது. சர்மான்களை அவர்களுக்குக் கிட்டிய இருபத்தைந்தாம் எண் அறையில் வைத்துப் பூட்டிவிட்டு,