பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

97


ரிப்பன் மாளிகை, செக்ரடேரியட் அலுவலகம் ஆகிய இரண்டு இடங்களுக்கும் போய்விட்டு தண்டையார்ப் பேட்டைக்குச் செல்ல விரும்பினான். சற்று நேரம் விச்ராந்தியாக ஓரிடத்தில் தனித்து இருந்தால் சிலாக்யம் என்று கருதினான். பெரிய ஹோட்டல் ஒன்றில் காப்பி குடித்துவிட்டு காரை எடுத்தான். ‘ராபின்ஸன் பூங்கா’ குறுக்கிட்டது. அங்கேயே காரை நிறுத்திவிட்டு, உள்ளே நுழைந்தான். அடித்த வெய்யில் எங்கே ஓடி ஒளிந்துகொண்டதாம் ?...

எதிரெதிர் வரிசைகளில் அடுக்கி நிறுத்தப்பட்டிருந்த பெஞ்சுப் பலகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் குந்தினான். கைப்பிடித் துண்டுகொண்டு முகத்தைத் துடைத்துக்கொண்டான். ‘டால்க் பவுடரின்’ இனிய சுகந்தத்தின் நெடி மனத்துக்கு எவ்வளவு இதமாக இருக்கிறது !

கையுடன் கொணர்ந்திருந்த டைரியைப் புரட்டிய போது, மெல்லிய இருமல் ஒலி கேட்டுத் தலையை உயர்த்தினான் அவன். எதிர்ப் பெஞ்சின் முடுக்கிலே தலை கவிழ்ந்தபடி சாய்ந்திருந்த பெண் ஒருத்தி, அப்போதுதான் மெல்லச் சிரம் நிமிர்த்தினாள்!

என்ன ஆச்சரியம் !....

யார் அவள் ?

பூவழகியா ?

பூவழகிப் பெண்தானா ?

ஆம்; ஆவளேதான்!

பூட்டப்பட்டிருந்த அறையிலிருந்து எப்படி விடுதலை பெற்றாள் ?

அழகுத் தேவதைக்கு அன்புத் தேவதை ஏதாவது மனமிரங்கி மாற்றுச் சாவி தந்து விடுவித்திருக்குமோ ?

இருக்கக்கூடும்!..
க. ம.–7