5
மாரியம்மன் கோவிலுக்குக் குடும்பசகிதமாய்ச் சென்று, அம்மன் தரிசனம் செய்து திரும்பினார்கள்.
மத்தியான்னம் வந்தது.
சிவஞானம் அன்றைக்கு ஒர் எடுப்புச் சாப்பாடு வரவழைத்தான். 'தாட்' இலைகள் இரண்டு வந்தன. மல்லிகா உணவைப் பரிமாற டிபன் பாத்திரத்தைத் திறந்தாள். கணவனின் இலையில் சோற்றை அள்ளி வைத்தாள். அவளது பூங்கரங்கள் அப்பொழுது வெளி றி யி ரு ங் த ன ; அவை நடுங்கிக்கொண்டிருந்தன. பிள்ளை பெற்று நாட்கள் முப்பதுகூட ஆகியிருக்கவில்லையல்லவா ? உடல் தேறி வி ட க் கூ டு மா அதற்குள் ?
சற்று முன்தென்பட்ட மேலே நாட்டுத் தம்பதியர் போய்விட்டனர்.
அப்போது, "ஹல்லோ அத்தான் ” என்ற குரல், அன்பின் பரிணாமசக்தியுடன் கேட்டது.
எடுத்த எடுப்பில் திரும்பினான் சிவஞானம்.
அங்கு விஜயா நின்றுகொண்டிருந்தாள். ரோஜா நிறத்தில் நைலக்ஸ் புடைவையும் சோளியும் மின்னின.
"வா, விஜயா : செளக்கியமாக இருக்கிறாயா ? எங்கே உன்கணவர்?’ என்று குசலம் விசாரித்தான் சிவஞானம். அவன் விசாரித்துக்கொண்டே விஜயாவை நோக்கினான். பொங்கி வழிந்துகொண்டிருந்த எழில், இப்போது புதிய மெருகுடனும் புதிய கவர்ச்சியுடனும் புதிய பொருளுடனும் பொலியக் கண்டான்.
மல்லிகா ஜாடையாக நோக்கி, தன் மாங்கல்யத்தை நெருடிய வண்ணம், அருகிருந்த விஜயாவை எடைபோட்டான்.
"என் கணவர் அதோ வந்துக்கிட்டிருக்காங்களாக்கும்! என் அன்பு அத்தானை நீங்க இப்போதான் முதன் முதலாகப் பார்க்கப்போறீங்க!" ' என்று கூறினாள் விஜயா. "வாங்க அத்தான்! இவர்தான் என் அத்தான் மிஸ்டர் சிவஞானம்!" என்று அறிமுகப்படுத்தினாள் விஜயா. மகிழ்வு பொங்கி வழிந்தது.
விஜயாவுக்கென்று இப்படி ஒரு சிரிப்பா? துடிப்புடன் இயங்கும் மன இயல்பு கொண்ட விஜயா பம்பரமாகச் சுழன்றாள்.