உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

“ஒண்னுமில்லையே !... அம்மாவைப்பத்தி நினைச்சேன். மனசு ஒருமாதிரி சலனம் கண்டிடுச்சு!...” என்றான். கடைசியில் ‘அப்பா’ என்ற பாசச் சொல்லை வேண்டுமென்றே அவன் இணக்கவில்லை.

காலையில் புறப்படு முன்னம், சோமசேகர் கண்களை மூடிய வண்ணம், சூன்யத்தின் வெளியில், நின்று கண்ணீர் வடித்தார். அப்போது, அக்காட்சியைக் கண்ட ஞானபண்டிதன் அவரை நெருங்கினான். “உன் அன்னையை எண்ணினேன் !” என்று கூறி அவர் விழிநீரை வழித்துவிட்டார்.

“அப்பா !...” தடுமாற்றத்துடன் வார்த்தைதகளை உதிர்த்தான்.

‘சொல்லு தம்பி !’

“அம்மா எப்போது செத்தாங்க ?”

“நீ பிறந்த மூணு நாலு மாசத்துக்கெல்லாம் அவள் கண்ணை மூடிட்டாள் !”

“என்ன சீக்கு ?”

“... நெஞ்சடைப்பு !”

“எங்கே செத்தது ?”

“வந்து... எஸ். கோயமுத்துரரிலே !”

“”அம்மா போட்டோ ஒண்ணுகூட இல்லையா உங்ககிட்டே?”

“இல்லேப்பா !...”

“ஐயோ, நான் ரொம்ப ரொம்ப அதிர்ஷ்டக்கட்டை ! நான் மிகவும் பாவி !... பெற்ற அம்மாவைக்கூட காணக்கூடக் கொடுத்துவைக்கலே !... அப்பா, உங்க படம் ஏராளம் இருக்கு ! ஆனா அம்மா படம் ஒண்னுகூட இல்லையே!...”

“அவளை படம் எடுக்கிறதுக்கு இருந்த ரெண்டொரு சந்தர்ப்பம் நழுவிடுச்சு! அவ போட்டோ இருந்திருந்தால் உனக்கும் எனக்கும் எவ்வளவோ ஆறுதலாயிருந்திருக்கும் : எஸ்...! கட்டாயம் ஆறுதலாக இருந்திருக்கும் !” அவர் மூக்குக் கண்ணாடியை நகர்த்திவிட்டு, கண்களைச் சுத்தம் செய்திருப்பார்: கட்டாயம் செய்திருப்பார் !

சுருட்டு புகைந்தது.

ஞானபண்டிதன், காரின் திருப்பத்தில் சாய்ந்தான். துப்பாக்கியின் கைப்பிடியில் தலை இடறியது.