பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119

அதை ரசித்த வண்ணம் அவன் கடிதத்தாளை எடுத்து எழுதத் தொடங்கினான். எழுதத் தொடங்கிய போது, அவனை இன்ப உணர்ச்சி ஆட்கொண்டது. ‘கார்பன் தாளை’ வசமாக வைத்துக்கொண்டான். பேனா ஒடியது ; அதாவது எழுதியது ! பெயர் அச்சடிக்கப்பட்ட கடிதத்தாளில் எழுதினான் !

நேசம் நிரம்பின பூவழகிக்கு,

இந்தக் கடிதம் அதுவும், இந்தத் தனிப்பார்வைக்கான கடிதம் உங்களுக்கு நிரம்பவும் வியப்பை அளிக்கக்கூடும். அதே வியப்பில் துளியேனும் மகிழ்ச்சியும் இரண்டறக் கலந்திருக்கும் பட்சத்தில், அது எனக்கும் மானசீகமான அகமகிழ்வைக் கட்டாயம் தருமென்பதற்கு அட்டியில்லை.

இந்து மத சம்பிரதாயத்தில் விட்ட குறை என்றும் தொட்ட குறை என்றும் பேசப்படுகிறது. நீங்கள் அதே இந்து சமயத்துக்கு உட்பட்டவர்களானால், அது குறித்து நீங்கள் அறிந்திருப்பீர்கள் !

நீங்கள் யார், என்ன இனம், உங்கள் பிறப்பு வளர்ப்பு யாவை, உங்கள் பூர்வாசிரமம் எது, உங்கள் குணநலம் எப்படி என்பன போன்ற கேள்விகளைப்பற்றியெல்லாம் எனக்குக் கவலை கிடையாது. எனக்குள்ள கவலையெல்லாம், உங்களுடைய அபலைத்தன்மை கொண்ட வாழ்வுக்கு என்னால் விடிமோட்சம் கிட்டினால் அதையே என்னுடைய கடமையின் தன்னிறைவுப் பூர்த்தியின் வெற்றி விழாவாகக் கொண்டாடுவேன். என் சமூகப்பற்று அப்படி. செயல் வழியில் நடக்கக் கனவு கண்டு, திடசங்கற்பம் கொண்டு ஒழுகி வரும் என்னுடைய உதிரத்தில் உதிரமாய்ப் பரவி விட்ட பண்பு அது.

என்னப்பற்றி நீங்கள் ஒரளவுக்காவது ஒரு பிடிமானம் கொள்வதற்காகவேனும் சில வரிகள் உங்களுக்குத் தெரிய வேண்டாமா ?- அதற்கெனவே சுயநலமிக்க இவ்விவரங்களை உங்கள் முன்னே வைத்தேன்.

என் எழுத்துக்களில் கருணைப் பண்போ அல்லது சுய நலப் பண்போ வாடை வீசுவதாக நீங்கள் கருதினால் அதற்கும் நானே பொறுப்பாகக்கூடியவன். ஏனென்றால், கருணை காட்டுவதால் ஓர் உயர்வோ, கருணைக்குப் பாத்திரமாவதால் ஒரு