உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16


முள்ளுக்கு முள் !

விருந்தினர்கள் மூவரையும் ஒரே அளவான விசேஷ சிரத்தையுடன் கவனித்து, அவர்களுக்கான வசதிகளையும் செய்து கொடுத்துவிட்டுத்தான் ஞானபண்டிதன் சாப்பிட்டான்.

பெரியவர் சோமசேகர் அவர்களுக்கு வயிறு மந்தம். இரவு பட்டினி போட்டார். ‘லங்கணம் பரம ஒளஷதம்’ என்பதை அனுபவபூர்வமாகக் கண்டவர் அவர்.

இராப்பொழுது கழிந்துகொண்டிருந்தது.

நண்பன் காளமேகத்திடமிருந்து வாங்கி வந்த பத்திரிகையின் நினைவு அப்போதுதான் அவனுக்கு வந்தது. எடுத்துப் படித்தான். ரேடியோ மெல்ல முனகிக்கொண்டிருந்தது, சீக்காளி பிதற்றும் பாவனையாக, அதை நிறுத்திவிட்டுக் கதையைப் படித்தான். வாஸ்தவத்திலேயே ஒரே மூச்சில்தான் படித்தான். படித்ததும் அவன் சிந்தனை கிளர்ந்தெழுந்தது.

கதை இதுவேதான் ;

ஒரு சிறுவனும் ஒரு சிறுமியும் சிறு பிராயத்தில் விளையாடுகையில் ‘டூ’ போட்டுப் பிரிந்துவிடுகிறார்கள். காலம் ஒடுகிறது. அவன் பெரியவனகிறான். தன் விளையாட்டுத் தோழியை எப்படியாவது கண்டு, அவளுடன் ‘டூ’வைக் கலைத்து, ‘ராசி’ ஆகிவிடத்துடிக்கிறான். மணப்பெண்கோலத்தில் இருக்கும் தன் விளையாட்டுத் தோழியை அவள் புருஷனின் அனுமதியுடன் தனியே சந்தித்து ‘ராசி’ ஆகிறான்.

உணர்ச்சி சுழித்திடும் நல்ல மனோதத்துவப் பின்னல் கதை.

விளையாட்டுத் தோழியைப் பற்றி வருணித்திருந்த விதத்தைப் படித்தான். அப்பெண்ணின் வலது கன்னத்து மச்சம்பற்றிக் குறிப்பிட்டது அவனுக்குக் குழலியை நினைவு படுத்திக் காட்டியது. பெரும்பாலும், சொந்த அனுபவங்களையே பெரும்பாலானவர்கள் கதைகளாகச் சிருஷ்டிப்பதையும் அவன்