பக்கம்:கரை மணலும் காகித ஓடமும்.pdf/141

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

135

ஞானபண்டிதனுக்குக் குழப்பம் மிகுந்தது.

“நான் உன் அப்பா !...நீ பயப்பட்டுவிடாதே ! முள்ளை முள்ளால்தான் எடுக்க வேணும் !...செங்கோடன் சாப்பாட்டை வெட்டட்டும்...இல்லை, யாரையானும் வெட்டிட்டுப் போகட்டும் ! ... இவன் கொடிதானே நாட்டிலே கொடி கட்டிப் பறக்குது !... இவன் மாதிரி துரோகிகளையெல்லாம் பாகிஸ்தான்காரனைச் சுட்ட மாதிரி சுட்டுப் பொசுக்க வேணும் !...ம் !” என்று என்று சிரித்தபடி ஸ்ரீமான் சோமசேகர் புறப்பட்டார் ! அவருடன் புகைச் சுருள்களும் புறப்பட்டன.

ஞானபண்டிதன் மட்டிலும் புறப்படாமல் இருப்பானா, என்ன ?..